Thursday 7 December 2017

பிரச்னை தீர்க்கும் "சக்கரம்'


விஷ்ணுவின் அருளை விரைந்து பெற, கையிலிருக்கும் சக்கரத்தை வழிபடுவர். அவர் தன் சக்தியை ஒன்று திரட்டி சக்ராயுதமாக ஏந்தியிருப்பதாகச் சொல்வர். "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' என்று அவரைப் போற்றுவர். சக்கரத்துக்கு திருவாழியாழ்வான், சுதர்சனமூர்த்தி, திகிரி, ஸ்ரீசக்ரம், சக்கரத்தாழ்வார் என்றெல்லாம் பெயருண்டு. "சுதர்சனம்' என்றால் "நல்ல காட்சி'. சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு கைகள் உண்டு. இதில் வலப்புறம் 8 ஆயுதங்களும், இடப்புறம் 8 ஆயுதங்களும் இருக்கும். நோய், எதிரிபயம், திடீர் பிரச்னைகள் நீங்குவதற்கு இவரை வழிபடுவர். ராமனின் தம்பி பரதனாக மனித வடிவம் கொண்டு பிறந்தது இந்த சக்கரமே. காட்டுக்குச் சென்ற அண்ணன் வரட்டுமே என 14 ஆண்டுகள் காத்திருந்ததன் மூலம் சக்கரத்தாழ்வாரின் (பரதன்) பேரன்பை உணரலாம். ""வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு'' என்று பெரியாழ்வார் சக்கரத்தைப் போற்றுகிறார். சுடராழி என்பது சக்கரத்தைக் குறிக்கும்.

No comments:

Post a Comment