Sunday, 3 December 2017

கண்டிச்சா ராஜா கதை சொன்னா பத்தினி


நல்ல விஷயங்களை உபதேசிப்பதில் மன்னன், மனைவி, நண்பன் ஆகிய மூன்று விதமான அணுகுமுறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றியுள்ளனர். "இது தான் சரி' "இப்படி தான் நடந்தாகணும்' என்று ஒன்றைச் சொன்னால், "நீ சொல்வது பெரிய வேதவாக்கோ? நான் அதை கட்டாயமாக கேட்டாகணுமோ' என்று எதிர்த்துப் பேசுபவர்களைப் பார்க்கிறோம். இதில் அவர்கள் குறிப்பிடும் "வேதம்'என்ற சொல் முக்கியமானது. ஒரு ராஜாவைப் போல, வேதம் இடும் கட்டளைகளை "ஏன்? எதற்கு?' என்று கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் சத்தியத்தையும், தர்மத்தையுமே வேதம் போதிக்கிறது. இதை "பிரபு சம்ஹிதா' என்பர். 

ஒரு நண்பனைப் போல இதமாகச் சொல்வதை "ஸுஹ்ருத் சம்ஹிதா' என்பார்கள். புராணங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் போல, அதிகார தோரணை இல்லாமல் மென்மையான முறையில் நமக்கு நல்ல பழக்கங்களை எடுத்துச் சொல்லும் முறை இது. 

கொஞ்சம் கற்பனையுடன் கண், மூக்கு வைத்து கதையாக ஜோடித்து மனைவியைப் போல நல்லதை எடுத்துச் சொல்லி, தீய பழக்கங்களைப் போக்கும் முறைக்கு "காந்தா சம்ஹிதா' என்று பெயர். "காந்தா' என்றால் "பத்தினி' (மனைவி). காவியம், நாடகம் ஆகியவை இதில் அடங்கும்.

No comments:

Post a Comment