Wednesday 31 January 2018

பக்தருக்காக பெயர் மாறியவர்


காஞ்சிபுரம் திருவெஃகாவில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வலமிருந்து இடமாக பள்ளி கொண்ட கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். இதனால் இவர் "கிடந்தான்' என்று பெயர் பெற்றார். ஆழ்வார்கள் இவரை கச்சிக்கிடந்தான், கஞ்சைக்கிடந்தான், மணிவண்ணன் என்றெல்லாம் பெயர் சூட்டி பாடியுள்ளனர். திருமழிசையாழ்வாரின் சீடரான கணிகண்ணன் என்ற தீவிர பெருமாள் பக்தரை, தன் மீது பாடல் பாடும்படி உத்தரவிட்டான் மன்னன். அவர் மறுக்கவே நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த திருமழிசைஆழ்வார் இவ்வூரை விட்டுக் கிளம்பினார். 

இங்கிருந்த பள்ளி கொண்ட பெருமாளையும் தன்னுடன் அழைத்தார். ஆழ்வாரின் சொல் கேட்ட சுவாமியும் அவருடன் கிளம்பினார். இவ்வாறு தன் பக்தர் சொல்லிய செயலை செய்ததால் இவருக்கு "சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்ற பெயர் அமைந்தது.

உயிரைக் காப்பாற்றும் விரதம்


சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்னும் சிவபக்தர் வசித்தார். இவர் தன் மகள் பூம்பாவையை, பார்வதியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களைச் செய்து முடித்த சிவநேசர் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்திருந்தார். இதையறிந்த சம்பந்தர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது சிவனுக்கு திருமண விழா நடந்து கொண்டிருந்தது. சாம்பல் கலசத்தை கோவில் முன் கொண்டு வரச் செய்தார் சம்பந்தர். அப்போது அவர் பாவைப்பதிகம் பாடினார். சிவனின் திருக்கல்யாணத்தை காணாமலே போகிறாயே என்ற பொருளில், "பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள், ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய்,'' என்ற வரிகள் அதில் அமைந்தன. இதையடுத்து பூம்பாவை உயிர் பெற்றாள். நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயில் இருப்பவர்கள் பிழைக்க பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து இந்த பதிகத்தைப் பாடலாம்.

நந்தியின் அருள் பெற என்ன செய்வது ?


சிவபெருமானுக்கு வாகனமாக இருக்கும் நந்திதேவரின் அருட் பார்வை அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. நந்தனார் சிவன் மீது அதீத பாசம் கொண்டிருந்தும் கூட கோயிலுக்குள் செல்ல முடியாத அவருக்கு, நீண்ட நாள் சிவதரிசனம் கிடைக்கவில்லை. காரணம் அவர் வாசலை மறைத்துக் கொண்டு இருந்ததால்தான். அதன் பிறகு சிவனின் உத்தரவுக்கு பின் ஒதுங்கிக் கொண்டார்.

சிவனின் வாகனமாகவும், கண்ணிமைக்காமல் பாதுகாப்பவருமான நந்திதேவரின் அருளைப் பெற்றவர்கள் உலகில் எட்டு பேர் தான். 

அவர்கள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் மற்றும் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் ஆகியோர். இந்த அருளாளர்களை பக்தியுடன் வணங்குவோர்க்கு நந்தியின் திருவருள் எளிதில் கிட்டும்.

சிவனின் ஐந்து வடிவங்கள்


சிவனின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி, பைரவர், பிட்சாடனர், நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகியவை சிறப்பானவை. 

சனகர், சனந்தர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு ஆசிரியராக இருந்து சிவன் உபதேசித்த கோலம் தட்சிணாமூர்த்தி. அமைதி தவழும் முகமுள்ள இவரை "சாந்தமூர்த்தி' என்று அழைப்பர்.

தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள் தங்கள் தவபலம் காரணமாக, தாங்கள் கடவுள்நிலைக்கு உயர்ந்து விட்டதாக ஆணவம் கொண்டிருந்தனர். அந்த ஆணவத்தை அடக்கி அவர்களை நல்வழிப்படுத்த சிவன் இளமையும், அழகும் மிக்கவராக அந்த வனத்துக்கு வந்தார். அவர் பிச்சை பாத்திரம் ஏந்தியிருந்ததால் "பிட்சாடனர்' என்று பெயர் பெற்றார். இவரை "வசீகர மூர்த்தி' என்று அழைப்பர். உயிர்கள் கொண்டுள்ள ஆணவத்தை பிச்சையாக ஏற்று அவர்களை உய்விப்பதே இந்த வடிவத்தின் நோக்கம்.

வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர்கள் சிவனின் நடன கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்களுக்காக தில்லைவனம் என்னும் சிதம்பரத்தில் சிவன் நடராஜராக நடனம் ஆடினார். ஆனந்தமாக நடனமாடியதால் இந்த வடிவத்தை "ஆனந்த மூர்த்தி' என்பார்கள்.

அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட சிவன் எடுத்த வடிவம் பைரவர். இவரை "வக்ர மூர்த்தி' என்று சொல்வர். இவரை வணங்கினால் இந்த உலகத்தில் நமக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கும்.

சிவனும், பார்வதியும் இணைந்த கோலத்தில் மகன் முருகனை நடுவில் அமர்த்திய கோலம் சோமாஸ்கந்தர். இவரைக் "கருணாமூர்த்தி' என்று அழைப்பர். குடும்ப ஒற்றுமைக்காக இவரை வணங்கலாம்.

ஏன் போடுகிறோம் எலுமிச்சை மாலை ?


பத்ரகாளி, துர்க்கை, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இந்த மாலையை தயாரிக்கும் போது ஒரே அளவுள்ள மஞ்சள் நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்ப்பது நல்லது. பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பழங்கள் காயாக இருந்தால் தவிர்த்து விடலாம். எலுமிச்சை மாலை சாத்தும் போது அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம். நீண்டநாள் தடைபட்ட செயல்கள் நிறைவேற எலுமிச்சை மாலை சாத்தும் வழக்கம் இருக்கிறது.

எமதர்மனின் பி.ஏ. யார் ?


நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும், காலம் என்ற நியதிக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். உலகிலேயே மிகவும் உயர்ந்தது நேரம் தான். அதனால் தான் நாம் அனைவரும் கால தேவனான எமதர்மனின் பெயரைச் சொன்னாலே பயப்படுகிறோம். ஏனெனில் அவன் தர்மம், நீதி இவற்றிற்கு கட்டுப்பட்டவன். பணக்காரனா ஏழையா படித்தவனா பாமரனா என்றெல்லாம் பார்க்காமல், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உயிரைப் பறிக்கும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவனை "தர்மராஜன்' என்று அழைக்கிறோம். 

எமதர்மன் ஒருசமயம். உலக மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கிட தனக்கொரு உதவியாளர் வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினான். சிவபெருமானும் ஒப்புக்கொண்டார். இந்த சமயத்தில் சூரியனுக்கும், நீலாதேவிக்கும் "சித்ரகுப்தன்' என்ற மகன் பிறந்தான். பிறக்கும் போதே இடக்கையில் ஓலைச்சுவடியும், வலக்கையில் எழுத்தாணியும் வைத்திருந்தான். தன் தந்தையின் விருப்பப்படி சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்து எமதர்மனின் உதவியாளராகும் பதவியைப் பெற்றான். பார்வதி வரைந்த சித்திரம் ஒன்றிற்கு சிவன் உயிரூட்டியதாகவும், அவரே சித்திர குப்தர் என்றும் ஒரு தகவல் உண்டு. 

இவர் நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிதேவதை ஆவார். இவரை வழிபட்டால் கேதுவின் அருள் பெற்று பிறவிப்பிணி நீங்கி நற்கதி அடையலாம். காஞ்சிபுரத்திலும், தேனி அருகிலுள்ள கோடாங்கிபட்டியிலும் சித்ரகுப்தருக்கு கோவில் உள்ளது.

அற்புதம் அருளிய ஆண்டவன்

Related image

சென்னிமலை முருகனுக்கு மலைமேல் மண்டபம் கட்ட தீர்மானித்தார் நிலத்தம்பிரான். கட்டும்போதே மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கு மதில் எழுப்பும் பணியையும் மேற்கொள்ள விரும்பினார். அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி நகருக்குச் சென்றார் தம்பிரான். ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்த அவரும், அவருடைய சீடர்களும் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தனர். அப்போது அங்கே வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களைத் தடுத்தார். “யாரைக் கேட்டு மரத்தை வெட்டுகிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் அதட்டினார். அவரிடம், ‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன்!’ என்று பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான். காரணம், அவருடைய பதில் ஆங்கிலத்திலேயே இருந்ததுதான்.

அதைக்கேட்டு திடுக்கிட்ட அதிகாரியால், தனக்குச் சமமாக அவர் ஆங்கிலம் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே தன் கோபத்தைக் காட்டினார். “மரத்தை வெட்டறதுமில்லாம, திமிரா பேசற இவனை மரத்திலே கட்டி வைங்கடா?’ என்று உத்தரவிட்டார். ஆனால் உடன் இருந்தவர்கள் தயங்கினார்கள். ‘‘ஐயா, இவர் பெரிய மகான். இவரை தண்டிக்கறது நமக்குதான் அழிவு’’ என்றார்கள். அவர்கள் பயப்படுவதற்குக் காரணங்கள் இருந்தன. முந்நூறு ஆண்டுகளுக்கு முன், பத்து வயதுப் பையன் ஒருவன், அவன் பிறந்த ஊர் காரணமாக செங்கத்துறையான் என்று அழைக்கப்பட்டான். பஞ்சம் பிழைக்க சென்னிமலைக்கு வந்து, ஒரு பண்ணையாரிடம் வேலைக்கு சேர்ந்தான். தன்னுடைய 25வது வயதிலும் அப்பாவியாக இருந்த அவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, கையில் வேலுடன் சென்னியாண்டவர் காட்சி தந்தார். கூடவே அவனை, “நிலத்தம்பிரானே!” என்று அழைக்கவும் செய்த அவர், ‘இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோயில் கட்டு!’ என்றருளி மறைந்தார்.

ஒருநாள், பண்ணையில் வேலை செய்யும் ஒருவனை நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். “இவனை நாகப்பாம்பு கடிச்சுட்டுது. வைத்தியர் வீட்டுக்குப் போக வண்டி கேட்க வந்தோமுங்க!’ என்றனர். அப்போது பக்கத்தில் இருந்த செங்கத்துறையான், பாம்புக் கடிபட்டவனை நெருங்கினான். பச்சிலையைக் கசக்கி அவன் மூக்கருகில் சிறிது நேரம் வைத்திருந்து, வேறு சில தழைகளைக் கசக்கி, அவன் வாயில் சாறை விட்டான். பின்பு வேப்பிலையால் அவன் உடல் முழுவதையும் நீவி விட்டான். சற்று நேரத்தில் பாம்பு கடிபட்டவன் எழுந்து உட்கார்ந்தான். இந்தக் காட்சியை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இந்த வித்தையை எங்கே கற்றான் அவன்? ஆனால், செங்கத்துறையானோ, ‘எல்லாம் சென்னியாண்டவன் செயல்’ என்று மட்டுமே சொன்னான். அப்போதே அவன் தன் பெயர் நிலத்தம்பிரான் என்று அனைவருக்கும் அறிவித்தான். 

சென்னிமலை மீது முருகனுக்குக் கோயில் கட்ட ஆரம்பித்தார் நிலத்தம்பிரான். கோயில் திருப்பணிகள் நடந்தபோது தம்பிரான் ஊர் ஊராகச் சென்று, மக்களது குறைகளைத் தன் ஆன்மிக சக்தியால் தீர்த்து வைப்பார். அதன்மூலம் கிடைத்த தொகையுடன்  கட்டிடப் பணியாட்களுக்குக் கூலி கொடுக்கக் குறிப்பிட்ட நாளன்று சென்னிமலைக்கு வந்து விடுவார். அவர் கூலி கொடுக்கும் முறை வித்தியாசமானது. பொரி மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, கடலலையை கலக்குவதுபோல, பணத்தை பொரியுடன் கலக்கி, தன் இரு கைகளால் அள்ளிப் போடுவார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தால் அவரவர் செய்த வேலைக்கான கூலி துல்லியமாக இருக்கும்! இதுபோனற பல அற்புதங்க்ளைச் செய்த தம்பிரானையா மரத்தோடு கட்டிப் போடுவது? அப்போது தம்பிரான், “ஐயா, என்னைக் கட்டிப் போடுவது இருக்கட்டும். உங்கள் மனைவிக்கு சித்தம் கலங்கி, கொள்ளிக் கட்டையை எடுத்துக்கொண்டு, ‘ஊரைக் கொளுத்தப் போகிறேன்’ வருகிறார்கள். முதலில் அவரைக் கட்டுப்படுத்துங்கள்,’’ என்று சாதாரணமாகச் சொன்னார். 

அதேநேரம் அதிகாரியின் வேலையாள் வேகமாக ஓடிவந்து, நிலத்தம்பிரான் சொன்ன தகவலை உறுதி செய்தார். பதட்டத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அதிகாரி, வேலைக்காரப் பெண்கள் தன் மனைவியை அமுக்கிப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்போது அவள்முன் வந்து நின்ற தம்பிரான், தன்னிடமிருந்த விபூதியை எடுத்து அவள் தலையில் மூன்று முறை போட்டுவிட்டு, “சென்னியாண்டவா, இந்தக் குழந்தையைக் காப்பாற்று!” என்று வேண்டிக் கொண்டார். அடுத்த கணமே அவள் பழைய நிலைக்கு வந்தாள். இதைக் கண்டு வியந்த அதிகாரியும் அவர் மனைவியும், தம்பிரான் காலில் விழுந்து வணங்கினர். அதோடு, அதிகாரியே தன் ஆட்களைக் கொண்டு, அந்த மரத்தை வெட்டி சென்னிமலைக்கு அனுப்பி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாச நாதர் ஆலயத்தில் இப்போதும் இருக்கும் அந்த முன் கதவுதான் அது. ஒரே மரத்தால் செய்யப்பட்டது.

கோயில் வேலைகளை முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தபோது, சென்னியாண்டவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். சென்னிமலை அடிவாரத்தில் தனக்காக தானே ஏற்கெனவே அமைத்திருந்த  சமாதியில் போய் அமர்ந்தார். அந்த நிலையிலேயே 15ம் நாள் சமாதியானார். மலைப்படி அருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேலே முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள். மகா மண்டபத் தூணில் நிலத்தம்பிரானது சிலை உள்ளது. அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சாரியார் ஒருவர் வந்து பூஜை செய்து, வில்வ மரப்பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார். ஒருநாள் சிவாச்சாரியார் வராததால் நிலத்தம்பிரானே பூஜை செய்தார். அப்போது உயரம் குறைந்த  தம்பிரானுக்காக ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி பொட்டை தன் நெற்றியில் ஏற்றுக் கொண்டாராம். அதனால் இப்போதும் அந்த சிலை தலை தாழ்த்தியபடியே இருக்கிறதாம்! ஈரோட்டில் இருந்து பெருந்துறை வழியாகச் சென்றால் 33 கி.மீ. பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சென்னிமலை அமைந்துள்ளது. மலைக்கு மேலே செல்ல வாகன வசதிகள் உண்டு.

சிதம்பரத்தில் தைப்பூசம்


தைப்பூச நன்னாள், முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கே இன்னொரு விஷயம்... சிவ மைந்தனுக்கு மட்டும் அல்ல... சிவனாருக்கும் உரிய முக்கியமான நாளும் கூட!

ஆமாம். தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலம், பூலோக கயிலாயம் என்று போற்றப்பட்ட நன்னாள் இந்த தைப்பூசத் திருநாளே என்கிறது புராணம்!

பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் கடும் தவமிருந்தார்கள். அதன் விளைவாக, தில்லையில் நடராஜரின் திருநடனத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றனர். இவர்களுடன் நானும் இன்னும் எட்டுப்பேரும் தரிசித்தோம் என்கிறார். யார் அவர்... திருமூலர்பெருமான் அவர்!.

பதஞ்சலி மற்றும் வியாக்ர பாத முனிவர்களின் மகத்துவத்தையும் தில்லைச் சிதம்பரத்தில் நிகழ்ந்த புராணச் சம்பவங்களையும் ஏராளமான நூல்கள் விவரித்து எடுத்துரைக்கின்றன.

முப்பத்து முக்கோடி தேவர்கள்,பிரம்மா,விஷ்ணு,தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரோடும், சிவகாமி அம்மையோடும், தில்லையில் திருநடனத்தை எல்லோரும் காணும்படிச் செய்த தவ முனிவரின் கருணையயை விவரிக்க வார்த்தைகளே இல்லை என ஞானநூல்கள் போற்றுகின்றன.

‘‘திருவாரூரிலே சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு திருத்தொண்டத் தொகைபாடுவதற்கு, தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று முதலடி தந்தருளினார் தியாகராஜர்.

முன்பொரு சமயம்... பிரம்ம தேவர், அந்தர்வேதி எனும் இடத்தில் மிகப் பெரிய வேள்வி ஒன்று செய்ய முனைந்த வேளையில், தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீக்ஷிதர்கள் மூவாயிரம் பேரையும் அழைக்க, தில்லைக்கு வந்து அவர்களை வரும்படி வேண்டி கேட்டுக் கொண்டார்.

அப்போது, நாங்கள் பகல் போஜனத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும். அதற்கு வேண்டிய சௌகர்யம் செய்து தருவதாக இருந்தால், நாங்கள் அனைவரும் வருகிறோம் என பிரம்மாவிடம் உறுதி கேட்டுவிட்டு, உறுதி தந்தனர்.

யாகம் சிறப்பாக நடந்தது. பின் அந்தணர்கள் தில்லைக்குப் புறப்பட்டனர். பிரம்மதேவன் அடடா... அதிதிகளுக்கு அன்னமிடாமல் அனுப்புகிறோமே என வருந்தி அவர்களை நிறுத்தினார். தயை கூர்ந்து, சாப்பிட்ட பிறகு செல்லலாம் என்று வற்புறுத்தினார். வலியுறுத்தினார். உடனே தில்லைவாழ் அந்தணர்கள்... நடராஜரைப் பூஜிக்காமல், சாப்பிட மாட்டோம் என்று கூறினர். இதனால் ரொம்பவே நொந்து போன பிரம்மா, ஈசனை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினார்.

பிரம்மாவின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைக்கு மனமிரங்கினார் சிவனார். இறங்கி வந்தார். வேள்வி தீயிலிருந்து ஜ்யோதிர்மயமான உருவம் ஒன்று கிளம்பியது. அதைக் கண்ணுற்ற தீக்ஷிதர்கள் யாகத் திரவியங்களான பால், தேன், சந்தனம் ஆகியவற்றால் அதை குளிரச் செய்தனர்.

அதில் இருந்து, நடராஜரின் உருவம் கொண்ட சின்னஞ்சிறிய அளவு கொண்ட மாணிக்கமூர்த்தம் தென்பட்டது. பிரம்மா இதைக் கண்டு களிப்புற்றார். கண்கலங்கி நமஸ்கரித்தார். நெகிழ்ந்தார். நெக்குருகினார்.

ஈசனின் அருளால், ஈசனின் இன்னொரு வடிவாய் வந்த மூர்த்தம் இது. ஆகவே இந்த மூர்த்தத்தை பூஜியுங்கள். பிறகு உணவருந்துங்கள். அதையடுத்து தில்லைக்குச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் பிரம்மா.

அந்தணர்கள் அவர் வேண்டுகோளுக்கு இணங்கினார்கள். அந்த மூர்த்தியையே பூஜை செய்துவிட்டு உணவு அருந்தினார்கள். பிறகு இவர்களை ஒவ்வொருவராக தனித்தனி ரதத்தில் ஏறச்செய்து மூவாயிரம் ரதம் சூழ ஹிரன்யவர்மன் என்ற அரசனை முதலாகக் கொண்டு தில்லையின் எல்லைக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி தில்லை மூவாயிரம் அந்தணர்களும் பயணத்தைத் தொடங்கினார்கள்.

எல்லையை அடைந்ததும் ஒவ்வொருவராக எண்ணிப் பார்க்கப்பட்டது. அப்போது மூவாயிரம் பேர் இருக்கவேண்டும் அல்லவா. ஆனால் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொந்நூற்றி ஒன்பது பேர் இருந்தார்கள்.

என்ன இது... ஒரு ஆள் குறைகிறதே என வருந்தினான் ஹிரண்யவர்மன். கவலைப்பட்டான். கலங்கிப் போனான். ‘என் சிவமே... என்ன இது சோதனை. அந்த மூவாயிரமாவது நபரைக் காணோமே...’ என கண்ணீர்விட்டுப் புலம்பினார். அப்போது, வருந்த வேண்டாம். அந்த தில்லை மூவாயிரம் பேரில் அடியேனும் ஒருவன்’ என அசரீரி கேட்டது.

இதைக் கேட்டு எல்லோரும் ஆனந்தித்தார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரையும் நாடராஜ பெருமானாகவே பாவித்து உபசாரங்கள் செய்தார்கள். அன்று தொடங்கி இன்று வரையும், அவர்களால் கொண்டு வரப்பட்ட மூர்த்தத்திற்கு, அதாவது ரத்தினசபாபதிக்கு, பால், தேன், சந்தனம் முதலானவை கொண்டு, தினமும் இரண்டாம் கால பூஜையின் போது, காலை 11 மணிக்கு, அபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர். .

சிதம்பரம் திருத்தலத்தில், கடந்த ஒன்பது நாட்களாக ஆதிமூலநாதர் சந்நிதியில், அர்த்தஜாம பூஜையின் போது பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் வழிபடும் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. இன்று 31.1.18 புதன் கிழமை அன்று, முக்கிய நிகழ்வான தைப்பூச விழா சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

இன்றைய தைப்பூச நாளில், பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இணைந்து நான்கு ரத வீதிகளிலும் திருவீதியுலா வரும் வைபவம் நடக்கிறது. இதையடுத்து சிவகங்கை தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். பிறகு நடராஜர் சந்நிதியில், அன்னப்பாவாடை வழிபாடும் இரண்டு முனிவர்களுக்கான தரிசன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருக்கயிலாயமே தில்லை... தில்லையே திருக்கயிலாயம் என்று கயிலாயத்துக்கு இணையாகப் போற்றப்படும் தில்லை சிதம்பரத்தில் நடைபெறும் தைப்பூச நாளில், திருச்சிற்றம்பலத்தானை தரிசிப்போம். வணங்கிப் பிரார்த்திப்போம்.

புகழ் பெருக வைக்கும் ‘பூச’ விரத வழிபாடு

புகழ் பெருக வைக்கும் ‘பூச’ விரத வழிபாடு

ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பூசத்தில் வழிபாடு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான். அந்த அடிப்படையில் நாளை தைப்பூசம் வருகிறது. 

அந்த தைப்பூச திருநாளில் விரதமிருந்து முருகப்பெருமானை கொண்டாடுவதற்கு காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து கவசப் பாராயணங்களைப் படித்து வழிபட வேண்டும். வேலை வணங்குவதே வேலை எனக் கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும்.

பூசத்தன்று கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும்.

பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். 

தைப்பூசம் பற்றிய அரிய தகவல்கள்

தைப்பூசம் பற்றிய அரிய தகவல்கள்

இன்று (புதன்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது.

தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.

தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வள்ளி மலை. வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப்படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

Tuesday 30 January 2018

வாழ்வில் தடைக்கு மேல் தடை ஏற்படுகிறதா ? நீங்கள் செய்யவேண்டிய பரிகாரம்

temple1

வாழ்வில் ஒருவருடைய ஜாதகத்தில் தடைக்கு மேல் தடை ஏற்படுகிறதா? அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் ?

• எவர் ஒருவர் வாழ்வில் தொடர்ந்து தடை ஏற்படுகிறதோ, அவர்கள் குலதெய்வத்தை இடைவிடாமல் வணங்க வேண்டும். 

• நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றோமா என்று கவனிக்க வேண்டும். முன்னோர்கள் இறந்த தேதி, திதி சிலருக்கு மறந்துபோய் இருக்கலாம். இதனால், வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

முன்னோர்களை தினமும் வணங்கலாம். முக்கியமாக மாதந்தோறும் வரும் அமாவாசை மற்றும் வருடத்திற்கு ஒருமுறை வரும் தை அமாவாசை, மகாளய அமாவாசை அன்றாவது முன்னோர்களின் பெயர் சொல்லி எள் தண்ணீரை கொடுக்கலாம். 

• சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரகங்களைத் தினமும் வலம்வர வேண்டும்

• ஒவ்வொரு பௌர்ணமி தோறும் அம்மனை வணங்கி வரலாம். 

சந்திர கிரகணத்தால் எந்த நட்சத்திரகாரர்களுக்கு தோஷம் ?

Lunar

சந்திர கிரகணம் எப்போது தொடங்குகிறது, எந்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும், கிரகணம் தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டியவை என்னென்ன என்று தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் விரிவாக நமக்கு விளக்கியுள்ளார். 

சந்திர கிரகணம் என்பது மனக்காரகனான சந்திரன் நவக்கிரகங்களில் முதன்மையான சூரிய ஒளியில் இருந்து பூமியால் மறைக்கப்படுவதால் ஏற்படுவதாகும். சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பௌர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது 'ப்ளு மூன்" என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 18ம் நாளான புதன்கிழமை (31.01.2018) அன்று ஆயில்ய நட்சத்திரத்தில் ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் உண்டாகிறது. ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் என்பது ராகுவின் வசம் மனக்காரகனான சந்திரன் இருப்பதாகும்.

சந்திர கிரகண நேரம் :

ஸ்பரிசம் - நாழிகை 28.10-க்கு தொடங்கி 37.5-க்கு முடிவடைகின்றது. அதாவது, 

ஆரம்பம் - மாலை 5.16

மத்யமம் - இரவு 7.03 

முடிவு - இரவு 8.50 

சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் :

புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி இந்த ஐந்து நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது. 


கிரகணம் தொடங்கும் முன் செய்ய வேண்டியவை :

• கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு எவ்வித உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

• கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுதல் கூடாது.

• கிரகண காலங்களில் ஆலய தரிசனத்தை தவிர்க்க வேண்டும்.

• கிரகண காலத்திற்கு முன் செய்த உணவுப் பொருள்கள் மீதம் இருப்பின் அந்த உணவில் தர்ப்பை புல்லைப் போட்டு வைக்க வேண்டும்.

• வீட்டில் உள்ள குடிக்கும் தண்ணீரிலும் தர்ப்பை புல்லைப் போட்டு வைக்க வேண்டும்.

• கிரகண பட்டை (நெற்றியில்) அணிய வேண்டும். 

• ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் சரியாக மாலை 5.16 முதல் 8.50 முடியும் வரை குழந்தைகளை வெளியில் அழைத்துவரக்கூடாது. குழந்தைகள் அருகில் தர்ப்பை புல் போடலாம் அல்லது கையில் கட்டி விடலாம். 

• கிரகண காலகட்டத்தில் கூடுமானவரைத் தண்ணீர் குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது. 

கிரகணம் முடிந்த பின்பு செய்ய வேண்டியவை 

• கிரகணம் முடிந்த பின்பு ஆலய வழிபாடு செய்ய வேண்டும்.

• கிரகணம் முடிந்த பின்பு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

• கிரகணம் முடிந்த பின்பு வீட்டை சுத்தம் செய்து புதிய உணவைச் சமைத்து உண்ண வேண்டும்.

• மீதமுள்ள உணவில் உள்ள தர்ப்பை புல்லை எடுத்து விட்டு இறைவனை எண்ணி போஜனம் உண்ணலாம். மத்தியமான பலனே கிட்டும்.

சென்னையில் தோஷம் போக்கும் நவக்கிரகத் தலங்கள்

சென்னையில் தோஷம் போக்கும் நவக்கிரகத் தலங்கள்

நவகிரக தோஷம் உள்ளவர்கள் சென்னையில் உள்ள தோஷம் போக்கும் நவக்கிரக ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

* சூரியன் - சென்னை செங்குன்றம் அருகேயுள்ள ஞாயிறு கோவில் 

* சந்திரன் - சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் அமைந்துள்ள அகஸ்தியர் கோவில்

* செவ்வாய் - வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் 

* புதன் - திருவாலங்காடு 

* வியாழன் - பாடி வலிதாயநாதர் கோவில்

* சுக்கிரன் - மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில் 

* சனி - சென்னை பூக்கடை தங்கசாலையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் 

* ராகு-கேது - சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள மல்லீஸ்வரர், குன்றத்தூர் நாகேஸ்வரர்

சிவன் ஆலயத்தில் அமரலாம் - விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது ஏன் ?

சிவன் ஆலயத்தில் அமரலாம் - விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது ஏன்?

சிவன் ஆலயத்தில் அமரலாம். ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது ஏன்? என்று கூறுவார்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

* சிவன் ஆலயத்தில்தரிசனம் முடிந் து வெளியேவந்து கொடிமரத்திற்கு அருகில் நமஸ்காரம்செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வர வேண்டும்.அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை.

* விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும்போது, மகாலட்சு மி நம் கூடவே வருவதாக சொல்வார்கள்.

அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விடவேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பாத யாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு பாத யாத்திரையாக வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக வருகின்றனர்.

தைப்பூச தினத்தன்று மாலை 5.16 மணியில் இருந்து இரவு 8.50 மணி வரையிலும் சந்திர கிரகணம் ஏற்படுவதால், பூஜை காலங்கள் மாற்றப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு, காலை 8 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளின் வழியாக வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோவிலை சேர்கிறார்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடை திருக்காப்பிடப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து ராக்கால அபிஷேகம், ராக்கால தீபாராதனை, ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படுகிறது.

சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

lunar-eclipse

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 31-ம் தேதி புதன்கிழமை (31-01-2018) சந்திர கிரகணம் மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும் இரவு 9.38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும். 

சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

• பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

• சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

• சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும்

பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

• கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக்கதை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்....

சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார். ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

• கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் எனப் புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

• கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.

• கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.

• ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

• செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.

• கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

• கிரகண விடுபடும் போது அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

• ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

• கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

• சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.

இனி வெற்றி மேல் வெற்றி தான்


பெருமாள் அல்லது ராமர் கோவில்களில் சுவாமியின் எதிரே ஆஞ்சநேயர் தனி சன்னிதியில் இருப்பார். சில தலங்களில் சுவாமி அருகில் நின்ற கோலத்தில் இருப்பார். மதுரை அருகிலுள்ள மன்னாடிமங்கலம் நரசிம்மர் கோவிலில் ஆஞ்சநேயர், தன்னைத்தானே வணங்கும் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இக்கோவிலின் முன் மண்டப சுவரில் ஆஞ்சநேயர் சிற்ப வடிவில் இருக்கிறார். 

இவருக்கு முன்புறத்தில் மற்றொரு ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இவர் சிற்ப வடிவில் இருப்பவரை இருகரம் கூப்பி வணங்கிக் கொண்டிருக்கிறார். நரசிம்மரையும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் வழிபட்டால் பயம் நீங்கும். செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

சக்திகள் பெருக்கும் சந்திர கிரகணம்

chandra_graganam

வானவியல் சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் (Astro Physics) பெரிதும் அறிவு சார்ந்தவர்கள். செவ்வாய்க்கிரகம் சிவப்பு என்ற அறிவியல் ஆய்விற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய்க்கு சிவப்பு வண்ணத்தில் ஆடை அணிவித்தவர்கள் நாம். அது போலத்தான் மற்ற கிரகங்களுக்கு இது பொருந்தும்.

இன்றைய காலத்தில் அறிவியல் கருவிகள் ஆயிரத்தின் துணைகொண்டு சொல்வதை, இருந்த இடத்தில் இருந்தே சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் இந்தியர்கள். அதுபோலத் தான் கிரகணங்களும். ஜோதிட சாஸ்திரப்படி ராகுவும், சந்திரனும் ஒரே நட்சத்திரக் காலில் சந்திக்கும் போது (அதே போல சூரியனும், கேதுவும் ஒரே நட்சத்திரக் காலில் சந்திப்பார்கள்) அப்போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. பௌர்ணமியில் சந்தித்தால் சந்திர கிரகணம், அமாவாசையில் சந்தித்தால் சூரிய கிரகணம் ஆகும். 

புராண சாஸ்திரத்தின்படி அமுதம் உண்ண அமர்ந்த தேவர்கள் வரிசையில் சந்திர, சூரியனுக்கு நடுவே ஓர் அசுரன் அமர்ந்தான். அமுதம் பரிமாறும் பகவானிடம் இருவரும் அதனைத் தெரிவிக்கவே, அவரும் தனது அமுதக் கரண்டியாலேயே அசுரனின் தலையைத் துண்டிக்க, அமுதம் பட்டதாலேயே சாகா வரம் அமைய, அவர்களே ராகு, கேது என இரு கோள்களாக ஆனார்கள்.

ராகுவிற்கு ஒருநாளில் 1 1/2  மணி நேரமும் (ராகு காலம்) கேதுவிற்கு ஒரு நாளில் 1 1/2 மணி நேரமும் (எமகண்டம்) கொடுத்து இருவருக்குமாக வாரத்தில் 21 மணி நேரம் வழங்கினார் இறைவன் என்பது வரலாறு. அதன் காரணமாகக் கோபம் கொண்ட ராகுவும், கேதுவும் (பாம்பு வடிவம்) ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இருவரையும் விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகின்றது என்பது புராணம். 

அறிவியல் முறைப்படி பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது என்கின்றனர். புரிதலுக்காகக் கூட நம் முன்னோர்கள் புராணத்தின் செய்தி வாயிலாக நமக்கு ராகு, கேது விழுங்குதல் செய்தியினைத் தந்திருக்கின்றார்கள். பஞ்சாங்க கணிப்பில் துல்லியமாக இத்தனை மணிக்குத் தொடங்கி, இத்தனை மணியில் நிறைவடைகின்றது என அறிவின் மூலமாகவே கணக்கிட்டுச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள் எனும் போது தலை வணங்குகின்றோம். 

கிரகண காலத்தில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும். எனவே அந்த நேரத்தில் உணவு உண்ணக்கூடாது என நமது பெரியவர்கள் சொல்லிவைத்தார்கள். காரணம் இந்த நேரத்தில் செரிமான சக்தி மிகவும் குறைவாக இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதாலேயே கிரகண காலத்தில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உண்ண வேண்டும் என்று கூறியுள்ளனர். 

மேலும் அந்த ரேத்தில் நமது வீட்டிலுள்ள உணவுப் பொருட்களில் தர்ப்பைப் புல்லினைப் போட்டு வைக்க வேண்டும் எனக் கூறுவோம். காரணம் தர்ப்பைப் புல் ஒரு மின்கடத்தி (Electricity Conductor) ஆகும். அது வானவெளியில் உள்ள அசுத்தக் கதிர்களை உணவுப்பொருட்களில் புகவிடாமல் தடுக்கின்றது. 

கிரகண காலத்தில் நம் இல்லத்திலும், ஆற்றங்கரையிலும் நீர்நிலைகளிலும் ஜபம் செய்வது சிறப்பானதாகும். காரணம் கிரகண காலத்தில் செய்யும் ஜபம் பல்லாயிரக் கணக்கான மடங்கு பலன் தருவதாகக் கூறப்படுகிறது. முன்னர் கழுத்தளவு நீரில் நின்று ஜபிப்பவர்களும் உண்டு. இப்போதும் கூட தொட்டிநீர்களில் நின்று ஜபிப்பவர்கள் உண்டு. எனவே, இந்த நேரத்தில் குளித்து, ஜபம் செய்வது, இறைவன் நாமங்களைச் சொல்வது, பஜனைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் பாடுவது போன்ற பயனுள்ள விஷயங்களில் ஈடுபட்டுப் பயன் பெறலாம். 

கிரகண காலத்தில் கர்ப்பிணிப்பெண்கள் வெளியே வருவதால் கதிர்வீச்சுக்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்பதால் அவர்களை வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறுவது இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. 

மொத்தத்தில் கிரகண காலம் என்பது நமது ஆன்மீக சக்திகளைப் பெருக்கிக் கொள்ள உதவும் அற்புதமான காலம் ஆகும். எனவே இந்தக் காலத்தைப் பயன்கொண்டு நமது ஆன்மசக்தியைப் பெருக்கிக் கொள்வோம். நம் முன்னோர்கள் இன்றைய அறிவியல் முன்னேற்ற நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரேயே அறிவியலில் சிறந்து விளங்கினார்கள் என்பதனை நமது இளந்தலைமுறைகளுக்கு இந்தச் செய்திகளின் மூலம் எடுத்துச் சொல்வது நமது கடமையாகும்.

சந்திர கிரகணம் வருகின்ற ஜனவரி 31-ம் நாள் மாலை 5.18-க்கு தொடங்கி இரவு 8.18-க்கு நிறைவடைக்கின்றது. பௌர்ணமி தைப்பூச நன்னாளில் வருகின்றது. 

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி, புணர்பூசம், ஆயில்யம், கேட்டை

முருகனை வணங்கும் குக சண்டிகேஸ்வரர்


சிவபக்தரான சண்டிகேஸ்வரர், சிவசன்னிதி கோஷ்டத்தை (சுற்றுச்சுவர்) ஒட்டி தியானத்தில் இருப்பார். நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் அருகிலுள்ள ஆதிகடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஒரே சன்னிதிக்குள் இரண்டு சண்டிகேஸ்வரர்களை காணலாம். 

இக்கோவிலிலுள்ள முருகனை "சிங்காரவேலர்' என்பர். இத்தலத்து சண்டிகேஸ்வரர் முருகனையும் பிரார்த்திப்பதாக ஐதீகம். இவருக்கு, "குக சண்டிகேஸ்வரர்' என்று பெயர்.

உப்பை நம்பவில்லை



உன்னைத் தான் நம்புகிறேன் முருகன் அடியாரான பாம்பன் சுவாமி சென்னையில் வாழ்ந்தார். ஒருநாள் அவர் சாலையில் நடந்து செல்லும் போது குதிரை வண்டி மீது மோதி கால் எலும்பு முறிந்தது. அவர் உண்ணும் உணவில் உப்பு சேர்ப்பதில்லை என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்பு சத்து குறைபாடு இருப்பதால், எலும்பு மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.

படுக்கையில் கிடந்த பாம்பன் சுவாமிகள், "முருகா...! நான் உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்'' என்று தான் எழுதிய சண்முக கவசத்தைப் பக்தியுடன் பாடி வந்தார். நாளடைவில் மருத்துவர்களே வியக்கும் விதத்தில் அவரது எலும்பு முறிவு குணமானது. "எந்த கடவுளும் கந்தக்கடவுளுக்கு மிஞ்சாது' என்பது பாம்பன் சுவாமியின் அருள்வாக்கு. நோயால் அவதிப்படுபவர்கள் விரைவில் குணம் பெற 48 நாட்கள் சண்முக கவசத்தை (30 பாடல்கள்) படிக்கும் வழக்கம் இருக்கிறது.

Monday 29 January 2018

மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில்

மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில்

கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற தலத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது.

ராமாயண கால சிறப்பு பெற்றதும், நவக்கிரக பரிகார தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படும் கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற தலத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முக்கியமான சிறப்பு சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்திரருக்கு தனியாக கோவில் அமைந்துள்ளது.

விஸ்வாமித்திரரின் யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை மற்றும் அரக்கர்களை கொன்ற காரணத்தால் ராம, லட்சுமணர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதை தீர்ப்பதற்காக யாகம் செய்ய இடம் தேடி, தில்லைவன காடான சிதம்பரம் வந்து காளி தேவியை பிரதிஷ்டை செய்து விட்டு, அவர்களோடு தெற்கு திசை நோக்கி விஸ்வாமித்திரர் வந்தார். அதே தில்லை வனம் விஜயாபதியிலும் இருப்பதை கண்டு, அங்குள்ள தோப்பில் காளி தேவியை பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக்கினார்.

அதன் பின்னர் ஹோம குண்ட விநாயகர், விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆகிய தெய்வங் களையும் பிரதிஷ்டை செய்த பின்னர் ஹோம குண்டம் வளர்த்து, யாகம் செய்து ராம, லட்சுமணர்களின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். பின்னாட்களில், விஸ்வாமித்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பற்றி அறிந்த பாண்டிய மன்னன் இங்கே கோவில் எழுப்பி அவனது மீன் சின்னத்தை இரட்டை மீன்கள் வடிவத்தில் கோவிலுக்கு உள்புற முகப்பில் அமைத்து வைத்தான்.

எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடம் விஜயாபதி என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கடலில் உள்ள விஸ்வாமித்ர தீர்த்த கட்டத்தில் நீராடிவிட்டு, தில்லைக்காளி கோவிலில் பொங்கல் வைத்து பூஜைகள் செய்கிறார்கள். அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும் உடனடி பலன் கிடைப்பது பலருக்கும் நம்பிக்கையாக உள்ளது.

இங்குள்ள கடலில் நீராடிவிட்டு, கோவிலில் உள்ள தெய்வ மூர்த்திகளை வழிபடுவதன் மூலம் ஒருவரது குடும்பத்தில் இறந்த கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மா ஆகியவை சாந்தி அடைய வழி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இங்கு, மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அன்னதானம் ஆகியவை நடத்தப்படுகிறது. விஸ்வாமித்திர மகரிஷி சூட்சும நிலையில் இங்கே தவம் செய்து வருவதாகவும் செய்திகள் உண்டு.

விஜயாபதி தலத்தில் செய்யப்படும் முக்கியமான பரிகாரம் நவ கலச பூஜை ஆகும். இந்த பூஜை முறைப்படி ஒன்பது கலசங்களில் ஒன்பது விதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, ஸ்நான பொடி, வெட்டிவேர், சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை குடத்துக்கு ஒன்று வீதம் விட்டு நீர் கலந்து, வாசனாதி திரவியங்களை தூவி விட்டு, கலசங்கள் நவ கிரகங்கள் கோவிலில் உள்ள வரிசைப்படி அமைக்கப்படும். நவக்கிரக பரி காரத்துக்கு உரியவர் மேற்கண்ட கலசங்களுக்கு முன்பாக கிழக்கு பார்த்து அமர வைத்து பூஜைகள் செய்யப்படும். அதன் பின்னர் கோவில் வில்வ மரத்தடியில் அவரை அமர வைத்து ஒன்பது கலசங்களில் உள்ள தீர்த்தம் மூலம் நவ அபிஷேகம் செய்யப்படும். அதன் மூலம் சம்பந்தபட்டவரை பிடித்த தோஷங்கள் விலகி அவரது உடலும், உள்ளமும் பரிசுத்தமாவதாக ஐதீகம். அதன் பின் அகிலாண்டேஸ்வரி அன்னைக்கும், மகாலிங்க சுவாமிக்கும் அர்ச்சனை செய்யப்படும்.

நவக்கலச அபிஷேகம் முடிந்த, அதே ஈரத்துணியுடன் அருகில் உள்ள விஸ்வாமித்திரர் தீர்த்த கட்டம் என்ற இடமான கடல் பகுதியில் தீர்த்தமாட வேண்டும். பிறகு, கடற்கரை மணல் நெற்றியில் படுமாறு இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை சிவ மந்திரத்தை சொல்லியபடி உருண்டு எழுந்து, கடலில் மூன்று முறை மூழ்கி எழவேண்டும். இப்படி மூன்று முறை செய்த பின்பு, எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றப்பட்டு, அது கடலுக்குள் எறியப்படும். மேலும், அணிந்துள்ள ஆடைகளை கடலில் விட்டுவிடுவது முறை.

விஸ்வாமித்திரர் யாகம் செய்த ஹோமகுண்டம் இப்பொழுது கிணறாக உள்ளது. இந்த கிணற்றைத் தோண்டி, பாறைகளை மேலை நாட்டினர் ஆராய்ச்சிகள் செய்தபோது, அதன் வயது ராமர் பாலத்தின் வயதுக்கு இணையாக இருந்தது என்பது தகவலாக குறிப்பிடப்படுகிறது.

விஜயாபதி பரிகார தலமாக இருப்பதால் பித்ரு தர்ப்பணம் செய்யப்படுவதும் நடைமுறையில் உள்ளது. நவ கலச யாக பூஜை பகல் 12 மணிக்கு மேல் செய்யவேண்டும் என்று சொல்லப்படுவதோடு, பூஜை முடிந்த பின்னர் வேறு எங்குமே செல்லாமல் நேராக வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப் படுகிறது. பூஜை காரணமாக, பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குல தெய்வ சாபம் ஆகியவை விலகுவதோடு, ஒருவரது முற்பிறவிகள் மற்றும் இப்பிறவியில் செய்த பாவ கர்மாக்கள் மற்றும் நவக்கிரக தோஷங்கள் கட்டுப்படுவதாகவும் நம்பிக்கை.

திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வழியாக, ராதாபுரம் சென்றால், அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் விஜயாபதி என்ற இந்த கடற்கரை ஊர் அமைந்துள்ளது.

இது போன்ற தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் வரலாறுகள் வெளியாகும் "ஆப் லிங்" கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியில் தினந்தோறும் ஆன்மீக தகவல் வெளியாகும்.

கோவிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன ?

Related image

ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.

ஆலயம் புருஷாகாரம் என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. மனித உடலைப் போன்றது கோயில் என்பது இதன் பொருள். 

கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம். 

ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.

ஞானப்பாடல்கள் பாடிய சட்டை முனி சித்தர்

ஞானப்பாடல்கள் பாடிய சட்டை முனி சித்தர்

சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

சட்டை முனி தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மேலாடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. 

இவர் சரக்கு வைப்பு, நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை, ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார். சட்டை முனி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். தமிழைக் கற்றார். ஞானம் கொண்டார். சதுரகிரி சென்று சேர்ந்தார். வாதம் புரிந்து அநேக வேதியியல் விந்தைகள் செய்தார். பின் வேறு ஒருவரின் தேகத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். கற்ப மூலிகைகளை உண்டார். காயசித்தி செய்து கொண்டு அதிலேயே வாழ்ந்தார் என்று கருவூரார் கூறுகிறார். 

தமிழர் கண்ட வேதியியல் விந்தைகளைத் தரணியில் உள்ளோர்க்கு எடுத்துக் காட்ட , சட்டைமுனியின் வாத காவியம் ஒன்றே போதுமானது. இதிலுள்ள வேதியியல் விந்தைகளை, விவரிக்க முடியாத அதிசயங்களை, அற்புதங்களைக் காட்ட முயல்வதும், மிகவும் அரிய செயலாகும். சட்டைமுனி ரசவாதம் என்ற நூலில் பாதரசத்தை மணியாக்கி, அதற்கு உலோகங்கள் ரத்தினங்கள், உபரசங்கள் எல்லாவற்றினுடைய சத்துக்களையும் கொடுத்து, அவற்றை உயிருள்ள ரசமணிகளாக்கும் விதத்தையும் கூறுகின்றார். 

சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. 

இவர் சீர்காழி ஆலயத்திலும் சமாதியடைந்ததுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வழிபாடுகள் நடக்கிறது.

சித்தர்கள் நடமாடும் கடவுள்

சித்தர்கள் நடமாடும் கடவுள்

சித்தர்கள் என்பவர்கள் நடமாடும் தெய்வம், இறைவனின் பிரதிநிதிகள், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்ற யதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சித்தர்களைப் பற்றிய ஆய்வும், வழிபாடும் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் சித்தர்கள் என்றதும் ‘‘காட்டுக்குள் வாழ்பவர்கள்’’ என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவர்களை நெருங்கக் கூட பயப்பட்டதுண்டு.

ஆனால் சித்தர்கள் பற்றிய புரிதல் இப்போது மக்களிடம் வந்துள்ளது. சித்தர்கள் என்பவர்கள் நடமாடும் தெய்வம், இறைவனின் பிரதிநிதிகள், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்ற யதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சித்தர்கள் அனுக்கிரகம் இருந்தால், எந்த இலக்கையும், நம்மால் எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் மலர்ந்துள்ளது. 

அது மட்டுமல்ல.... சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால், தோஷங்கள், பிரச்சினைகள் நீங்கும் என்பதை உணர்ந்துள்ளனர். ஜீவ சமாதிகளில் பரவி நிற்கும் சித்தர்களின் அருள் ஒளி அலைகள் நம் மீது பட்டால் வாழ்வில் புத்துணர்ச்சி பெற முடியும் என்று மனதார நம்புகிறார்கள். 

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சித்தர்களின் ஜீவ சமாதிகளை நோக்கி செல்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆலயங்களுக்கு எந்த அளவுக்கு ஆத்மார்த்தமான நம்பிக்கையோடு செல்வார்களோ... அந்த அளவுக்கு ஜீவ சமாதிகளுக்கும் செல்கிறார்கள். 

தமிழ்நாட்டில் சராசரியாக 6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு சித்தர் வீதம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு தமிழகம் சித்தர்களின் தவப்பூமியாக திகழ்கிறது. 

சித்தர்கள் செய்த அற்புதங்கள் ஏராளம். ஆனால் அந்த அற்புதங்களை எல்லாம் சும்மா விளையாட்டுக்காக சித்தர்கள் செய்யவில்லை. மக்கள் தங்களை உணர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே செய்தனர். 

நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தப்புருஷர்களுக்கு உண்டு. பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு பணிவிடை செய்யும். இதனால் உயிரற்றவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் அவர்களிடம் இருந்தது. இது அவர்களை ‘‘நடமாடும் கடவுள்’’ என்று சொல்ல வைத்தது. 

எப்போதும் ஆனந்த மயமாகத் திகழும் சித்தர்கள் இப்போதும் ஒளி உடம்புடன் உள்ளனர். அவர்கள் இருக்கும் இடங்கள் ஆற்றல் மிகுந்த இடங்களாக மாறியுள்ளன. இன்று தமிழகத்தில் பல ஆலயங்கள் புகழ் பெற்று, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது என்றால் அதற்கு அங்கு ஓங்கி நிற்கும் சித்தர்களின் அருள் சக்தியே காரணமாகும். 

அதிலும் குறிப்பாக சித்தர்களின் ஜீவ சமாதி இருப்பதாக கருதப்படும் ஆலயங்கள் நிகரற்ற ஆற்றல்களை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. அதனால்தான் குறிப்பிட்ட சில தலங்களில் பக்தர்கள் வருகையும், வழிபாடும் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது. 

திருப்பதியில் கொங்கணவரும், சிதம்பரத்தில் திருமூலரும், திருவண்ணாமலையில் இடைக்காடரும், மதுரையில் சுந்தரானந்தரும், பழனியில் போகரும், ராமேஸ்வரத்தில் பதஞ்சலியும் உறைந்துள்ளதால்தான் இந்த ஆலயங்களில் இருந்து அருள் ஒளி பிரவாகமெடுத்து வெளியேறியபடி உள்ளது. 

போகர் சித்தர் வரலாறு

போகர் சித்தர் வரலாறு

சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன்சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.

பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன்சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது. 

மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில்பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள். 

இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகி விட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார். 

அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார்.

அந்த முனிவர் ” போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும்துணையாக இருக்கும் என்று கூறி பேசும்சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார். 

சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது, ஆச்சரியத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விட்டு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது. 

சிவன் சித்தத்தை தெளியவைத்தார், என்று நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின்கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார். 

பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர். 

மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். 

வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார். 

இன்றும் பழனிமலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி நல்அருள் பெறுவர். 

சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும். அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும். கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும். 

செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

பண வரவிற்கு எளிய பரிகாரம்

பண வரவிற்கு எளிய பரிகாரம்

பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்சனை உடனடியாக தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் பரிகார முறையை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் பண வரவு உண்டாகும். செல்வ நிலை உயரும்.

இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.

மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் 
ஸ்ரீம் கமலே கமலாலயே 
ப்ரஸீத ப்ரஸீத ஸகல 
சௌபாக்யம் தேஹி தேஹி 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் 
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ

முருகு என்றால் அழகு மட்டும் தானா ?


முருகன் என்ற சொல் "முருகு' என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகச் சொல்வர். முருகு என்றால் "அழகு'. முருகன் என்றால் "அழகானவன்'. ஆனால், "முருகு' என்ற சொல்லை வேறு மாதிரியாக ஆய்வு செய்கின்றன திவகாரம், பிங்கலந்தை, நாமதீப நிகண்டு ஆகிய நூல்கள்.

இந்தச் சொல்லுக்கு அழகு, பூந்தட்டுகள், எலுமிச்சை, எழுச்சி, அகில், முருகு என்னும் வாத்தியம் ஆகிய பொருள்களும் உள்ளதாக இந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. பூக்கள் நிறைந்த தட்டைப் பார்த்தால் மனம் மகிழ்கிறது. கள் குடித்தால் போதை ஏற்படுகிறது. எலுமிச்சையையும், அகிலையும் முகர்ந்தால் மணக்கிறது.

இவை நம்மை பரவச நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.இதுபோல் முருகனைக் கண்டாலும் மனம் பரவசமாகிறது. உள்ளத்தில் எழுச்சி ஏற்படுகிறது. முருகு என்ற ஒரு சொல்லுக்கு பலபொருள் இருப்பது போல, முருகனிடமும் பலவித அருள்சக்திகள் உள்ளன. இதனால் தான் அவரை 'முருகு' என்ற சொல்லால் அழைத்தனர்.

கல்வி தரும் விரதம்


பவுர்ணமியன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து வணங்க வேண்டும். காலையும் மதியமும் சாப்பிடாமல், மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சந்திரனுக்கோ அல்லது கோயில் நுழைவு வாயிலை அடுத்து இருக்கும் சந்திர பகவானுக்கோ வெள்ளை வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

எந்த தெய்வத்தை எண்ணி விரதம் இருக்கிறோமோ, அந்த தெய்வத்தின் முன்னால் அமர்ந்து மனமுருகி பாட வேண்டும். முடியாதவர்கள் மற்றவர்களைப் பாடச் சொல்லி கேட்டாலே போதுமானது. இரவில் பழம் அல்லது மிதமான உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பவுர்ணமி விரதம் கல்வி அபிருவித்தியைத் தரும்.

அழகை விருத்தி செய்யும். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம். அவர்கள் பட்டினியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பழங்கள் அல்லது சாத்வீகமான உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.

முருகன் என்ன நிறம் ?


கண்ணன் நீலம் கலந்த கரிய நிறமுள்ளவன். முருகனின் நிறம் சிவப்பு. பரிபாடலில் முருகன் வழிபாடு பற்றி சொல்லப்பட்டுள்ள தகவலின் படி. "இளஞ்சூரியனை ஒத்த நிறமுடையவன்' என்று சொல்லப்பட்டுள்ளது. சூரியன் சிவந்த நிறமுள்ளவன். அதன்படி, முருகனும் சிவப்பு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அவர் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்தவர் என்பதாலும், சிவப்பாக இருக்கிறார் என்பர்.

Sunday 28 January 2018

"மருத' சகோதரர்கள்

Image result for krishna leela

மருது சகோதரர்கள் பற்றி படித்திருப்பீர்கள். "மருத' சகோதரர்கள் பற்றி தெரியுமா ?

குபேரனின் மகன்களான நளகூபன், மணிகிரீவன் இருவரும் கயிலாய மலைச் சாரலில் உள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த நாரதரை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்தனர். கோபம் கொண்ட நாரதர், இருவரும் மருத மரமாக மாறும்படி சபித்தார். ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டு வாசலில், சகோதரர்கள் இருவரும் மருத மரங்களாக நின்றனர். ஒருநாள் யசோதை, கண்ணனின் குறும்புத் தனத்தைப் பொறுக்க முடியாமல் கயிற்றில் பிணைத்து உரலில் கட்டிப் போட்டாள். உரலை இழுத்துச் சென்ற கண்ணனின் திருவடி மருத மரங்களின் மீது பட்டதும் மரங்களாக இருந்த இரு வரும் சுயவடிவம் பெற்றனர்.

பொட்டு வைப்பது ஏன் ?

Image result for பொட்டு வைப்பது

நெற்றியில் திலகம் (பொட்டு) இல்லாமல் செய்யும் வழிபாட்டிற்கு பலன் இல்லை என்கிறது சாஸ்திரம். ஹோமம், பிதுர் தர்ப்பணம் போன்றவற்றில் ஈடுபடும் போதும் திருநீறு அல்லது திருமண் இட்டிருப்பது அவசியம். "நீறில்லா நெற்றி பாழ்' என்று அவ்வையாரும் திருநீற்றின் முக்கியத்துவத்தைக் கூறியுள்ளார்.

நெற்றியில் புருவ நடுவில் பைனீயல் கிளாண்ட் என்னும் அகச்சுரப்பி உள்ளது. இதனை யோகிகள் "மூன்றாவது கண்' என்னும் நெற்றிக்கண்ணாக குறிப்பிடுகின்றனர். அதை தூண்டி விழிப்படையச் செய்யவே நெற்றியில் பொட்டு, திருநீறு இட்டுக் கொள்கிறோம்.

திருநீறு அணிந்தால் உடலும், உள்ளமும் தூய்மை பெறும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியையும், குங்குமம், மஞ்சள் ரத்த தூய்மையையும் தரும். நெற்றியில் இடும் திலகத்தால் திருஷ்டி தோஷமும் நீங்கும்.

நதியாக இருந்து தெய்வமான பெண்


வேத காலத்தில் சரஸ்வதி நதி தெய்வமாக கருதப்பட்டாள். "சரஸ்' என்ற சொல்லுக்கு ஏரி, நீர்நிலை என்பது பொருள். "மகிமை மிக்க சரஸ்வதி மற்ற நதிகளை விட வேகமாகப் பாய்ந்தோடுகிறாள். வெற்றியளிக்கும் தேவதையான அவளை மகரிஷிகள் எல்லாரும் சேர்ந்து துதிக்கிறார்கள்' என்று ரிக் வேதம் சரஸ்வதியைப் போற்றுகிறது. பெரிய அளவில் ஓடிய சரஸ்வதி நதி பிற்காலத்தில் மறைந்தது. தற்போதும் சரஸ்வதி நதி ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனத்தில் பூமிக்கு 1000 அடிக்கு கீழே ஆறாக ஓடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நதி தெய்வமாக இருந்த சரஸ்வதியை பிற்காலத்தில் கல்வி தெய்வமாக மாற்றினர். இவள் படைப்புக் கடவுளான பிரம்மாவின் துணைவி ஆவாள்.

ஒல்லியா இருக்கீங்களா! முருகனுக்கு ரொம்ப பிடிக்கும்

Image result for pazhani murugan

நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில் ஒரு சுவையான தகவல் உள்ளது. ஒரு பாடலில், திருவாவினன்குடி என்னும் பழநிக்கு வரும் முனிவர்கள் மரவுரியையும், மான்தோலையும் உடுத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் பலர் முனிவர்கள். பலநாள் பட்டினி விரதம் இருந்து வந்ததால், அவர்கள் மிகவும் ஒல்லியாகி நரம்பும் எலும்பும் நன்றாகத் தெரிகின்றன. அவர்கள் எல்லாருமே கல்வியில் கரை கண்டவர்கள். கோபமே அவர்களுக்கு வராது. உள்ளத் தூய்மை உடையவர்கள். முனிவர்கள் மட்டுமல்ல! பழநிக்கு செல்லும் பக்தர்கள் எல்லாருமே உடல் இளைத்து ஒழுக்கம் குறையாமல் செல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறது. உணவு குறையும் போது உள்ளம் கடவுளிடம் ஒன்றி விடும் என்பதே இந்த விதி உணர்த்தும் கருத்து.

மகான்களின் நிஜப்பெயர்

Related image

கடவுளின் அம்சமாக பூமியில் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தியவர்கள் அவதார புருஷர்கள். அவர்களின் நிஜப்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

ஆதிசங்கரர் - சங்கரர்
பெரியாழ்வார் - விஷ்ணு சித்தர்
நம்மாழ்வார் - மாறன், சடகோபன்
வால்மீகி - ரத்னாகரன்
ஆண்டாள் - கோதை
ஆளவந்தார் - மணக்கால் நம்பி
புரந்தரதாசர் - ரகுநாதன்
நாமதேவர் - விட்டல்
கபீர்தாசர் - நிரு
வேதாந்த தேசிகர் - வெங்கடேசர்
பத்ராசல ராமதாசர் - கோபன்னா

முருகன் பழமொழிகள்


தமிழ்த் தெய்வமான முருகனைக் குறித்த பழமொழிகள் பல உள்ளன. அவை முருகனின் சிறப்பையும், பழமையையும் வெளிப்படுத்துகின்றன. 

* சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.
* சிந்தை நொந்தவனுக்கு கந்தனே துணை 
* வழிக்குத் துணை வடிவேல்
* வடிவேல் அறிய வஞ்சகம் இல்லை 

ஆகிய பழமொழிகள் கலியுகத்தில் ஏற்படும் தீமைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வது பற்றி வலியுறுத்துகின்றன. 

முருகன் அன்றி வேறு கதியில்லை என்பதை விளக்கும் வகையில் "கலிக்கும்(கலியுகத்திற்கும்) கிலிக்கும்(பயத்திற்கும்) கந்தனை எண்ணு' என்ற பழமொழியும் இருக்கிறது. 

"திக்கற்றவருக்கு தெய்வமே துணை' என்ற பழமொழி உண்டு. அந்த தெய்வம் எது என்பதற்கு விடையாக "கேள்(உறவினர்) அற்றவருக்கு வேள்(முருகன்)' என்று ஒரு பழமொழி இருக்கிறது. இந்த உண்மையை நமக்கு உணர்த்தவே தைப்பூச நன்னாளில் தன்னை நாடி வரும் பக்தர்களை நோக்கி, பழநி முருகப்பெருமான் "யாமிருக்க பயமேன்' என்று அபயகரம் காட்டி காட்சியளிக்கிறார்.

வெள்ளத்தை நிறுத்திய சிவன்


திருநெல்வேலி - அம்பா சமுத்திரம் சாலையில் 30 கி.மீ., தூரத்தில் உள்ள வீரவநல்லூர் அருகில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில் உள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இக்கோவிலில் சிவன் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். முற்காலத்தில் இக்கோவில் மருத மரங்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் இருந்தது. இங்கு சிவனை தரிசனம் செய்ய கருவூர் சித்தர் வந்தபோது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அவரால் ஆற்றைக் கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. கரையில் நின்றபடியே கோவிலுக்கு வர அருளும்படி சிவனிடம் வேண்டினார். அப்போது மருத மலர்களின் மணம் வீசியது. 

அதை உணர்ந்த அவர், "நறுமணமுடைய சிவனே!' என்ற பொருளில், "நாறும்பூ நாதா! நான் அங்கே வர வேண்டும்' என சொல்லி பாடினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன் வெள்ளத்தை நிறுத்தி கோவிலுக்குள் வர அருளினார். கருவூராரால் நறுமணம் மிக்கவர் என்று பாடப் பட்டதால் இவர், "நாறும்பூ நாதர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு சந்தன தைலத்தால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. வெள்ளத்தால் பொருளை இழந்தவர்கள் இவரை வழிபட்டு நன்மை பெறலாம்.

காயத்ரி மந்திரத்தின் ஆற்றல்

காயத்ரி மந்திரத்தின் ஆற்றல்

சூரிய பகவானை நித்தமும் வணங்குகிற விதத்தில் உச்சரிக்கப்படுகின்ற காயத்ரி மந்திரத்தின் வலிமை வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.

அக்னி பகவானை வணங்கும் விதமாக தினமும் தங்கள் இல்லங்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் யாகத் தீ மூட்டி, அக்னி பகவானை ஆராதித்தவர்கள்!

வி‌ஷ வாயு தன் கோரத் தாண்டவத்தை மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடத்திய வேளையில் - குறிப்பிட்ட தெருவில் ஒரு சில வீடுகளில் வசித்தவர்கள் மட்டும் - எத்தகைய பாதிப்புக்கும் உட்படாமல் இயல்பாக இருக்கிறார்கள் என்றால், அது பெரும் அதிசயம் ஆயிற்றே!

காதுகளுக்கு இனிமையான ஒலியை வழங்கக் கூடிய சங்கீதத்தை மெய்மறந்து கேட்கிறோம் அல்லவா? அந்த நேரத்தில் நம்மையே இழந்து விடுகிறோம்.

அதுபோல் நம் வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்டிருக்கிற மந்திர ஒலிகளுக்கும் அபரிமிதமான ஆற்றல் உண்டு. ‘மந்திரங்களிலேயே உயர்ந்தது காயத்ரி மந்திரம்’ என்று பகவான் கிருஷ்ண பரமாத்மா பூரிக்கிறார்.

சூரிய பகவானை நித்தமும் வணங்குகிற விதத்தில் உச்சரிக்கப்படுகின்ற காயத்ரி மந்திரத்தின் வலிமை வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. இதன் மகிமை, நம் முன்னோர்களுக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது.

காயத்ரி மந்திரத்தை நித்தமும் ஜபிக்கிற பண்டிதர்கள் தன் தேசத்தில் இருந்தால், அது நாட்டுக்கே பெரிய பாதுகாப்பு என்று அவர்களுக்கு சகல வசதிகளையும் கவுரத்துடன் செய்து கொடுத்தார்கள் அன்றைய மன்னர்கள்.

ஒவ்வொரு ஒலியும் அதற்கு உண்டான நேர்மறை அல்லது எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று மேலைநாட்டினர் அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபித்தால், என்னென்ன நேர்மறை மாற்றங்கள் (பாஸிடிவ் வைப்ரே‌ஷன்) வெளியே நிகழும் என்பதை மேலைநாட்டினர் கண்டறிந்து வியந்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் உள்ளவற்றின் சிறப்புகளை நம்மவர்கள் சொன்னால், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே வேளையில் அந்நிய தேசத்தினர் சொன்னால், ‘அப்படியா...’ என்று வாய் பிளந்து கேட்பார்கள்.

இதோ, காயத்ரி மந்திரத்தைப் பற்றி அந்நியர்கள் சொல்வதைக் கேட்போம்.

அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர், ‘‘ஒரு விநாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் காயத்ரி மந்திரத்துக்கு உண்டு. அத்தனையும் பாஸிட்டிவ் அதிர்வலைகள். இந்த மந்திரம் ஒலிக்கப்படும் இடத்துக்கு நாலா திசைகளிலும் பல நூற்றுக்கணக்கான மைல் தொலைவு வரை உள்ள இடம் மந்திர வலிமையால் தூய்மை அடைகிறது’’ என்கிறார்.

இந்துக்கள் சொல்கிற மந்திரங்களின் வலிமையை பிரபல ஆராய்ச்சியாளரான ஹான்ஸ் ஜென்னி என்பவர் வியந்து பாராட்டி இருக்கிறார். ‘‘இத்தகைய மந்திர ஆற்றல் தங்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்று இந்துக்களான அனைவரும் பெருமைகொள்ள வேண்டும்’’ என்கிறார் ஹான்ஸ் ஜென்னி.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார்: ‘‘நிறைய மந்திரங்கள் உச்சரித்து, தவம் புரிந்து சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள், பெரிய சிரமமான மந்திரங்கள் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலே போதும். சிறிய மந்திரம்தான். ஆனால், இதன் ஆற்றல் அளப்பரியது.’’

காயத்ரி மந்திரத்தை ஒருவர் ஜபிப்பதால் ஏற்படும் அதிர்வலைகள் அவரது உடலில் 24 சுரப்பி களைத் தூண்டுகிறதாம். இதனால் ஜபிப்பவருக்குப் புது சக்தி ஏற்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இப்படி காயத்ரி மந்திரத்தின் மகிமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகின் முதல் வழிபாடு

உலகின் முதல் வழிபாடு

காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று.

காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதனை சூரிய நமஸ்காரம் என்று சிறப்பாக குறிப்பிடுவர். 

இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது. 

பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான். இதுவே சூரியவழிபாட்டின் தொடக்கமாகும்.

Saturday 27 January 2018

சகல தோஷங்களும் நீக்கும் ஸ்தலம் கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர்

சகல தோஷங்களும் நீக்கும் ஸ்தலம் கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர்

கொளப்பாக்கத்தில் உள்ள ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் குடிகொண்டுள்ள இவ்வாலயம் சகல தோஷங்களும் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது.

சூரிய பகவானுக்கு உகந்த இரண்டாவது தலம் திருக்கண்டியூர் வீரட்டம். இக்கோயில் தஞ்சையிலிருந்து திருவையாறு போகும் வழியில் ஆறாவது மைலில் உள்ளது. குடமுருட்டியாற்றுக்கும், காவிரிக்கும் நடுவில் இத்தலம் உள்ளது. 

சென்னையில் உள்ள சிவாலயங்களில் சூரியனின் அம்சத்துடன் திகழும் ஆலயம் கொளப்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயமாகும். ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் குடிகொண்டுள்ள இவ்வாலயம் சூரியன் பரிகார ஸ்தலமாக-விளங்குகின்றது. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இவ்வாலயத்தில் சூரியர், பையரவர் சிவபெருமான் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்ய பன்னிரெண்டு துவாரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. 

நவக்கிரகத்தை குறிக்கக்கூடிய ஒன்பது துவாரங்களுடன் சேர்ந்து இச்சாசக்தி ஞானசக்தி, கிரியாசக்தி இந்த துவாரங்கள் வழியாக சுவாமி தரிசனம் செய்யும்போது சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என கூறுகின்றார்கள். 

வேலை வாய்ப்பு கிட்டும் தலம். அகத்தியர், சூரியன், வசிஷ்டர் வழிபட்ட தலம். பழைய பெயர் சிவபாதகேசநல்லூர். சூரிய ஓரையில் நெய் தீபம் ஏற்றி ஸ்லோகம் கூறி சூரியனை வழிபட்டால் நல்ல பலன் கிட்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு சிகப்புவஸ்திரம், சிகப்பு மலர் கொண்டு, எருக்க இலை, கோதுமை தானியம் கொண்டு வழிபட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை தருகின்றார்.

இங்கு கிழக்கு நோக்கி விசாலாட்சி உடனுறை ஸ்ரீவிஸ்வ வாதாபி கணபதிபோல் அருள்காட்சி நல்கும் நாதர் ஸ்ரீராஜகணபதி. வடக்கு பார்த்த முருகன் விசேஷமானது.

இத்தலத்து கால பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணி வரை அபிஷேக ஆராதனைகளும் ஏழு வாரங்கள் வழிபட்டால் வேண்டுவதை கிடைக்கவும் நற்பலன்களையும் அருள்பாலித்து வருகின்றார்.- ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவர் உற்சவருடன் எட்டுதிக்குகளுக்கும் காட்சி தருகிறார்.

போரூர் குன்றத்தூர் சாலையின் மத்தியில் கெருகம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து வடகிழக்கு பாகத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கொளப்பாக்கம் உள்ளது. 

ஆலய தரிசனம் நேரம்: காலை 7.30 முதல் 9 மணி வரை, மாலை 6 முதல் 8 மணி வரை.

இது போன்ற தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் வரலாறுகள் வெளியாகும் "ஆப் லிங்" கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியில் தினந்தோறும் ஆன்மீக தகவல் வெளியாகும்.

திருச்செந்தூருக்கு செல்பவர்கள் கட்டாயம் இதைக் கவனிக்கவும்


tiruchendur

முருகனின் படைவீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூரில் வழிபட செல்லும் முறை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம். 

திருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும். பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் 1 ரூபாய் கட்டணம் செலுத்தி கிணற்று படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் 2 வாளி தண்ணீர் நம் மேலே ஊற்றுவார்கள். அதில் குளித்துவிட்டு பின்னர் உடை மாற்றுபவர் மாற்றலாம் இல்லையென்றால் அருகிலுள்ள குளியல் அறையில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொள்ளலாம்.

பின் நேரடியாகக் கோவிலுக்கு செல்லாமல் அருகிலுள்ள மூவர் (மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகள்)  சமாதிக்கு சென்று வணங்கி விட்டுத்தான் முருகரை காண செல்ல வேண்டும். இவர்கள் யார் என்ற கேள்வி கட்டாயம் எழும்! சிதிலமடைந்திருந்த திருச்செந்தூர் திருக்கோயிலை புனரமைத்தவர்கள். 

மேலும், வாக்கு சொல்பவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், பரிகாரம் செய்பவர்கள் இவர்களுக்கு ஏற்படும் தோஷங்களுக்கு மூவர் சமாதுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். சென்று விளக்கேற்றுவது நன்மை. பின் கோயிலுக்கு வரும் வழியில் முன் பக்கமே பொருள் பாதுகாப்பு அறை உள்ளது. அதைக் கடந்து கோயிலை நோக்கி வந்தால் காலணி பாதுகாக்க அறை உள்ளது. அங்கு தேங்காய், பழம், பூக்கள் மாலைகள் வாங்கலாம். திருச்செந்தூரில் விலை அதிகம். தூத்துக்குடிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் பூக்கள் வெளி மாவட்டங்களில் இருந்துதான் வருகிறது. 

பின் முருகர் கோயிலுக்கு வந்து இலவச தரிசனம் அல்லது கட்டண தரிசனம் செய்யலாம். அர்ச்சனை செய்பவர்கள் சீட்டு வெளியில் கவுண்டரிலேயே வாங்கிக் கொள்ளவும். கட்டண தரிசனம் மூலம் முருகனின் கர்பகிரகம் எதிரே உட்காந்து தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள். 

கோயில் உள்ளே செல்வதற்கு முன் டிக்கெட் கவுண்டரில் நுழையும் முன் உங்களை அர்ச்சகர்களே 100/- அல்லது 200/- கொடுத்தால், நேரடியாக அழைத்துச் செல்கிறேன் என்று அழைப்பார்கள். அவர்களோடு போனால் வரிசையில் நிற்கும் நேரம் குறையும். நிறைய அர்ச்சகர்கள் அங்கே இருப்பார்கள். இவ்வளவு அர்ச்சகர்களை வேறு கோயிலில் காண முடியாது. நீங்கள் கொடுக்கும் பணத்தில் கோயிலுக்கும் இவர்களுக்கும் பகிர்ந்து எடுத்துக்கொள்வார்கள். டிக்கெட் எடுத்து வரிசையில் செல்ல கொடுக்கும் பணம் 100% கோயிலுக்கு சேரும். இவர்கள் மூலமாக சென்றால் 60%, 40%. உள்ளே சென்று மூலவரை தரிசனம் செய்து விட்டு அருகில் ஒரு குகை பாதை போல் இருக்கும். அங்கே கதவு திறந்திருந்தால் 5 ரூபாய் அங்கேயே டிக்கெட் எடுத்துக் குனிந்து செல்ல வேண்டும். மூலவரை வலமிருந்து இடமாக சுற்றுவது போல் இருக்கும். உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம். 

கூட்டமாக இருக்கும் நாட்களில் பஞ்சலிங்க தரிசனம் விடுவதில்லை. மூலவர்கள் இரண்டு உண்டு. 2-வது வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகரை காணலாம். தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும். ஆலங்குடி போன்று குருப்பெயர்ச்சிக்கு இங்கும் பெரிய விஷேசமாய் இருக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார். செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை வணங்குதல் வேண்டும்.

பின் அருகில் வள்ளி சன்னதி தரிசனம் முடித்து வலமாக சுற்றி வந்து தெய்வானை சன்னதியை தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் தரிசனம் முடித்து சனீஸ்வரர் சன்னதி பைரவர் அருகருகே உள்ளது. தரிசனம் செய்து விட்டு வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார் அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு  வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும். 

அங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு. பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே கோவில் சுவரில் ஒரு துளை இருக்கும். அந்த ஓட்டையில் உங்கள் காதுகளை வைத்தால் வெளிப்புறத்திலிருந்து வரும் கடல் காற்று ஓம் என்று ஒலிக்கும். கவனித்தால் நீண்டதாய் ஓம் எனும் ப்ரணவ மந்திரம் ஒலிப்பதைக் கேட்டு அருள் பெறலாம். பின் கொடிமரம் வணங்கி முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்!

மேலும் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் :

திருச்செந்தூரிலிருந்து 15 கிமீ தூரத்தில் குலசேகரபட்டனத்தில் ஸ்ரீ முத்தாரம்மன்கோயில் உள்ளது. தசரா பண்டிகை உலக பிரசித்தி பெற்ற கோயில் இது.

திருச்செந்தூரிலிருந்து 33 கிமீ தூரத்தில் ஸ்ரீ வைகுண்டம் உள்ளது. பெருமாள் ஸ்ரீகள்ளபிரான் அவதாரமாக இருக்கிறார். சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அற்புத கோயில் இது. 108 திவ்ய தேசத்தில் 44 வது திவ்ய தேச கோயில்.

மன்னிப்பு... இவருக்கு பிடித்த வார்த்தை

Image result for sivan

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ள கீரனூர் சிவலோகநாதர் கோவிலிலுள்ள சிவன், தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவராக அருளுகிறார். சிவனுக்கு எதிராக தட்சன் யாகம் நடத்தியபோது அக்னிபகவான் அதில் கலந்து கொண்டு அசுரர்களுக்கு அவிர்பாகத்தை (வேள்வி குண்டத்தில் இடப்படும் பொருட்கள்) கொண்டு சென்று கொடுத்தான். இதனால் கோபம் கொண்ட சிவன் அக்னியை கிளியாக மாறும்படி சபித்துவிட்டார்.கிளி வடிவம் எடுத்த அக்னி, இத்தலம் வந்து சிவனை வழிபட்டு, மன்னிப்பு வேண்டினான். அவனது தவறை மன்னித்த சிவன் மீண்டும் பழைய உருவத்தை அருளினார். அறியாமல் செய்த தவறுக்கு வருந்தி பாவமன்னிப்பு வேண்டுபவர்கள் இத்தலத்து சிவலோகநாதரை வணங்கினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆயுள் பெருக அதிகாலையில் எழுங்க


ஜோதிட சாஸ்திரப்படி ஆயுள், ஆரோக்கியத்திற்கு உரியவர் சூரியன். எல்லாருக்குமே நீண்டநாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே தான் அதிகாலையில் எழுந்து சூரிய வழிபாடு செய்பவர்களுக்கு நோய் அண்டாது. அவர்கள் ஆரோக்கியமாக தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது பொதுக்கருத்து. "அதிகாலையில் சூரியனைப் பார்க்காதவரின் வாழ்நாள் ஒவ்வொன்றும் வீணே'' என்கிறார் காஞ்சிப்பெரியவர். ஆயுளை விருத்தி செய்ய மட்டுமல்ல, நோயற்ற வாழ்வு வாழவும் அதிகாலையில் எழும் வழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

இவரே முதல்வர்

Related image

திருமாலின் ஆணைப்படி பிரம்மா படைப்புத் தொழிலை தொடங்கினார். முதலில் அண்டங்களை உருவாக்கினார். அவை எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அதைப் போக்க எண்ணிய போது, திருமாலே காஸ்யப முனிவருக்கும், அதிதிக்கும் ஒளி மிக்க குழந்தையாக அவதரித்தார். மும்மூர்த்தியின் அம்சமான இவர் ஆதியாக (முதன் முதலாக) தோன்றியவர் என்பதால் "ஆதித்யன்' என்று போற்றப்பட்டார். பூலோகத்தில் உயிர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடக்க, நவக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் தலைமைப்பதவி சூரியதேவனுக்கே வழங்கப்பட்டது. நவக்கிரக நாயகராக ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேரில் பூமியை வலம் வரத் தொடங்கினார். அது முதல் பூமியில் பகல், இரவு மாறி மாறி உண்டாகத் தொடங்கியது.

ஆங்கிலேயர் கனவில் துன்புறுத்திய குரங்குகள்


ல ஆண்டுகளுக்கு முன் திருச்சி ரயில் நிலைய பணிக்காக வந்த கற்களில் ஒன்று ஆஞ்சநேயர் வடிவில் இருந்தது. அதை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபடத் தொடங்கினர். 

ஒருநாள் அங்கு வந்த ரயில்வே அதிகாரி ஆர்ம்ஸ்பி, ஆஞ்சநேயர் சிலை மீது கால் தடுக்கி விழுந்தார். கோபம் கொண்ட அவர், உடனே அந்தச் சிலையை அகற்ற உத்தரவிட்டார். அவர் ஒரு ஆங்கிலேயேர். அன்றிரவு குரங்குகள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துவது போல அவருக்கு கனவு ஏற்பட்டது. மறுநாளே ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயருக்கு புதிய கோவில் கட்ட அனுமதியளித்தார். சிறியளவில் கட்டப்பட்ட அந்தக் கோவில் பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ரயில்வே காலனியில் இந்தக் கோவில் இருக்கிறது.

அம்பாளும் சூரியனும்

Image result for sakthi god

ஆதிசங்கரர் அம்பாளைக் குறித்து "சவுந்தர்ய லஹரி' என்னும் நூல் எழுதினார். அதிலுள்ள ஒரு ஸ்லோகத்தில் "சசி- மிஹிர- வக்ஷோருஹயுகம்' என்ற சொல் வருகிறது. இதற்கு அம்பாள், தனது தனங்களாக (மார்பு) சூரியனையும், சந்திரனையும் கொண்டு உலக உயிர்களுக்கு பாலூட்டுவதாகச் சொல்கிறார். உண்மையும் அதுவே! சூரிய ஒளி இல்லாவிட்டால் தாவரங்கள் இல்லை.

சூரியனின் ஒளிக்கற்றையில் இருந்து தான் தாவரங்கள் தங்களுக்குரிய சத்தைப் பெற்று சேமித்து வைத்துக் கொள்கின்றன. இலை, காய், பழம் என எந்த வகையாக இருந்தாலும் அதில் சத்து இருக்கிறது. இவற்றை நாம் சாப்பிடும் போது கிடைக்கும் சக்தி சூரிய ஒளிக்கற்றையை சேமித்ததாலேயே கிடைக்கிறது. அதாவது, சூரியன் நமக்கு தரும் பிரசாதமாகவே நாம் சாப்பிடும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தனது தனமான சூரியனின் மூலம், அம்பாள் உலக உயிர்களுக்கு பாலூட்டுகிறாள் என்கிறார் ஆதிசங்கரர். சூரிய, சந்திரரை சிவனின் கண்களாகவும் புராணங்கள் சொல்கின்றன.