Monday, 22 January 2018

அபூர்வ ஓவியம்


பஞ்சபூத தலங்களில் பிருத்வி (நிலம்) தலமான திருவாரூர் தியாகராஜர் கோவில் பிரகாரத்திலுள்ள சுவரில் வீரபத்திரரை ஓவிய வடிவில் தரிசிக்கலாம். இவர் தலையில் அக்னி கிரீடம் அணிந்திருக்கிறார். கிரீடத்தில் சூரியன், சந்திரன் இருக்கின்றனர். இவர் இடது மேற்கையில் சூலத்தின் உச்சியையும், வலது கீழ்கையில் சூலத்தின் அடிப் பகுதியையும் பிடித்தபடி இருக்கிறார். இவரது வலதுபாதத்தின் அருகே ரிஷபம் நிற்கிறது. இடதுபாதத்தின் அருகில் பார்வதியின் தந்தையான தட்சன், வாள், கேடயத்துடன் படுத்த கோலத்தில் இருக்கிறான். வீரபத்திரரின் இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.

No comments:

Post a Comment