Sunday 21 January 2018

உபய ராசிகளில் பிறந்தோர் கவனத்திற்கு

astro

ராசிகளில் சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என்று இருக்கிறது. மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். 

சரராசி என்றால் என்ன பொருள்? சரம் என்றால் இயங்கிக் கொண்டே இருப்பது என்று பொருள். ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள். உபயம் என்றால் ஒரேநிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள். 

இவைகள் எல்லாம் பலன் சொல்ல எப்படிப் பயன்படுகின்றன? உதாரணமாக ஒருகிரகம் ஒருவருக்கு உடல் உபாதையைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருக்கிறது எனக் கொள்ளுவோம். அந்தக் கிரகம் சர ராசியில் இருந்தால் பரம்பரை நோய் வரக்கூடும். ஸ்திர ராசியில் இருந்தால் குணப்படுத்த முடியாத நோயாக வரக் கூடும். உபய ராசியில் இருக்கும் கிரகங்கள் மூலமாக அவ்வப்போது வந்து போகும் நோய் வரக்கூடும். இவ்வாறு இந்த ராசிகளின் தன்மைகள் பலன் சொல்லப் பயன்படுகின்றன. 

உபய ராசிகளில் பிறந்தோர் கவனத்திற்கு....

மிதுனம் - கன்னி - தனுசு - மீனம் ஆகிய ராசிகள் உபய ராசிகளாகும். இந்த நான்கு ராசிகளின் அதிபதிகள் புதன் - குரு. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாதகாதிபதிகள். மேற்சொன்ன ராசிகளில் பிறந்தவர்கள் தான் மட்டும் வாழாமல் பிறரையும் வாழவைக்கும் எண்ணம் கொண்டவர்கள். எனவே மேற்சொன்ன ராசிகளில் பிறந்தவர்கள் துணை விஷயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.

துணை என்பது வாழ்க்கைத்துணை மட்டும் அல்ல, நண்பர்களும்தான். நட்பைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பணம் சார்ந்த விஷயங்களில் யாரேனும் ஒருவருக்கு உண்மையாக இருந்தால் நன்மை. முதலீடு செய்யும் போது அதிக ஆலோசனை மேற்கொள்வது அவசியம்.

No comments:

Post a Comment