Thursday 25 January 2018

பழம் படைக்கும் வழக்கம் தோன்றியது எப்படி ?


எந்தக் கோவிலுக்கு போனாலும், வீட்டில் பூஜை செய்தாலும் பழம் இல்லாமல் பூஜை இருக்காது. இவ்வாறு பழம் படைக்கும் வழக்கம் வந்ததற்கு ஒரு புராணக்கதை உள்ளது. மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூரில் மகிஷாசுரமர்த்தினி கோவில் உள்ளது. இந்தப் பகுதியில் கோல்ஹா என்ற அசுரன் வசித்தான். அவன் முனிவர்களை துன்பப்படுத்தினான். தன் தவலபலத்தால் இந்திர லோகம் சென்று, தேவர்களையும் கொடுமைப்படுத்தினான். தவபலத்தை தவறாகப் பயன்படுத்திய கோல்ஹாசுரனை, மகிஷாசுரமர்த்தினியாக மாறிய அம்பாள் அழித்தாள். 

தன் மரணத்தருவாயில், "அன்னையே! என்னை ஒரு பழமாகக் கருதி ஏற்றுக்கொள். உனக்கு பூஜை நடக்கும் காலங்களில் எல்லா மக்களும் பழம் படைக்க வேண்டும். ஒருவன் பிறக்கும் போது, பழத்தின் உள்ளிருக்கும் இனிய சதைப்பற்று போல நல்லவனே! அவனை கர்வம் என்ற தோல் மறைத்துள்ளது. கர்வமாகிய தோலை அகற்றி விட்டால், உள்ளிருக்கும் இனிய பகுதி வெளிப்படும். இந்த தத்துவத்தை உணரும் வகையில் பழம் படைக்க அனுமதி கொடு,'' என்றான். அம்பாளும், அவன் கோரிக்கையை ஏற்றாள். அன்று முதல், அம்பாளுக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்குமே பழம் படைக்கும் வழக்கம் தோன்றியது.

No comments:

Post a Comment