Wednesday, 24 January 2018

குழந்தை வரத்துக்கு பசு பராமரிப்பு


ராமனின் முன்னோரான திலீப சக்கரவர்த்திக்கு நீண்ட நாள் குழந்தை இல்லை. இதற்கு பரிகாரமாக, குல குரு வசிஷ்டரின் கட்டளைப்படி நந்தினி என்னும் பசுவை பராமரித்தார். இதன் பலனாக ஆண்குழந்தை பிறந்தது. ரகு என பெயரிட்டார். தன் பிள்ளையிடம் தொடர்ந்து பசுக்களை பாதுகாக்கும்படி வேண்டினார். அவனும் அவ்வாறே செய்தான். இதன் காரணமாக ரகுவிற்கு அஜனும், அஜன சக்கரவர்த்திக்கு தசரத மாமன்னரும், தசரதனுக்கு ராமனும் பிறந்தனர். ராமபிரானை நாம் அனைவரும் தெய்வமாக வணங்குகிறோம். பசுக்களை பராமரித்தால் சர்வ தேவதைகளின் அருளையும் பெற முடியும். குழந்தை இல்லாதவர்கள் பசுவிற்கு புல், பழம், அகத்திக்கீரை, வைக்கோல் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், கோமாதா அருளால் வம்சம் தழைக்கும்.

No comments:

Post a Comment