பகவான் ரமணரை சந்தித்த பக்தர்கள் சிலர், "சுவாமி! எனக்கு பயமாகவும், சஞ்சலமாகவும் இருக்கிறது. இதைப் போக்க நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஒற்றை வரியில், "யாருக்கு சஞ்சலம் என பார்!'' என்று மட்டும் பதில் சொன்னார். சிந்தித்து பார்த்தால் இதிலுள்ள பொருள் தெரியவரும். "யாருக்கு' என்ற சொல்லுக்கு விடை கேட்டால் "எனக்கு' என்ற பதில் வரும். "எனக்கு' என்ற ஒன்று நிச்சயமில்லாதது. நீ எவ்வளவு காலம் இருப்பாய்? எங்கிருந்து வந்தாய்? எப்படியும் உன் உயிர் போகத்தானே போகிறது. பிறகு ஏன் நீ பயப்பட வேண்டும்? என்ற பதில்கள் அந்த ஒற்றை வரியிலிருந்து உருவாகும். இப்படி சிந்தித்துப் பார்த்தாலே போதும். மனதில் பயம் ஏற்படாது. "நான்' என்ற எண்ணத்தை மனதிலிருந்து உதறித் தள்ளி விட்டால் அப்போதே மனதிலிருக்கும் பயம் ஓடி விடும்.
Wednesday, 24 January 2018
பயம் போயே போச்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment