தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் மண்ணியாறு தலைப்பு என்ற ஊர் உள்ளது. இங்கு சக்திவாய்ந்த காசி விசுவநாதர் கோவில் இருக்கிறது. நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஆலயம் இது.
சிவலிங்க வடிவில் கிழக்கு பார்த்தபடி அருள்பாலிக்கும் இத்தல இறைவனின் திரு நாமம் காசி விசுவநாதர். தெற்கு நோக்கி வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் காசி விசாலாட்சி. கேட்ட வரத்தை கேட்டபடி தரக்கூடிய இத்தல லிங்கம், காசிக்கு நிகரான லிங்கம் என்று போற்றப்படுகிறது.
No comments:
Post a Comment