Tuesday 23 January 2018

உங்கள் பாதுகாப்புக்கான கிருஷ்ண மந்திரம்


உங்கள் ஊரில் நடக்கும் ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அப்போது உபன்யாசகர், "ஸ்ரீஜானகி காந்தஸ்மரணே' என்று ராகத்துடன் சொல்வார். சுற்றியிருப்பவர்கள் "ஜெய் ஜெய்ராமா!' என்பார்கள். இதையடுத்து "ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' என்றோ, "கோபிகா ஜீவன ஸ்மரணே' என்றோ சொல்வார். அப்போது சொற்பொழிவு கேட்க வந்தவர்கள், "கோவிந்தா! கோவிந்தா!' என்பார்கள். 

இதற்கெல்லாம் காரணம் தெரியுமா? 

ஆன்மிகச் சொற்பொழிவுகளில் கலந்து கொள்பவர்கள், பேச்சு துவங்கும் முன் பலவிதமான உலக நினைவுகளில் மூழ்கியிருக்கலாம். மேலும், ஒருவருக்கொருவர் ஏதாவது வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இறைசிந்தனையை ஊட்டி, சொற்பொழிவின் பக்கம் கவனத்தைத் திருப்பவே, இவ்வாறு செய்யப்படுகிறது. 

மேலும், இந்த கிருஷ்ண, ராம நாமங்கள் எத்தகைய இன்னல்களையும் தீர்க்க வல்லவை. திரவுபதி "கோவிந்தா!' என அலறிய போது, கண்ணன் அவளது மானத்தைக் காப்பாற்றினார். கஜேந்திரன் என்ற யானை கூகு என்ற முதலையிடம் சிக்கி "ஆதிமூலமே' என்று பெருமாளை அழைத்த போது, அவர் கருடன் மீது வேகமாக பறந்து வந்து காப்பாற்றினார். மனிதரோ, விலங்கோ...மந்திரங்கள் உச்சரிக்கும் போது பாதுகாப்பு கிடைக்கிறது. கிருஷ்ண ஜெயந்தியன்று நீங்கள், "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே'' என்று பதினாறு வார்த்தை மந்திரத்தைச் சொல்லுங்கள். நன்மை பெறுவீர்கள்.

No comments:

Post a Comment