Thursday 26 October 2017

பாம்புக்காவடி எடுத்தது எப்படி?


முருகனுக்கும் பாம்புக்கும் தொடர்புண்டு. பாம்பைக் கண்டால் "சுப்பா ஓடிப்போ! சுப்புராயா ஓடிப்போ!' என்று சொல்லும் வழக்கம் கர்நாடகாவில் உண்டு. கர்நாடகத்தில் குக்கே சுப்பிரமணியர் நாகப்பாம்பின் அம்சமாக வணங் கப்படுகிறார். தமிழகத்திலும் பாம்பை காவடியில் வைத்து, சர்ப்பக்காவடியாக நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்தது. 

சர்ப்பக்காவடிக்குரிய விரதம் கடுமையானது. ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் சென்று ஆறு நாட்கள் விரதம் மேற்கொள்வர். முருகன், அந்த பக்தரின் கனவில் தோன்றி பாம்பிருக்கும் புற்றைச் சுட்டிக்காட்டுவார். அந்த புற்றுக்குள் இருக்கும் பாம்பைப் பிடித்து பச்சை மண் பாத்திரத்தில் இடுவர். அதனை காவடியாகக் கட்டி, திருச்செந்தூருக்கு சுமந்து செல்வர். வள்ளி குகை அருகில் மண்சட்டியோடு விட்டு விடுவர். பாம்பு அதிலிருந்து வெளியேறிச் சென்றபின், செந்தில் முருகனைத் தரிசிப்பர். இப்போது, சர்ப்பக்காவடி எடுக்கும் வழக்கம் இல்லை.

No comments:

Post a Comment