ஐப்பசி 5, 22.10.2017 ஞாயிறு
திரிதியை. வள்ளியூர் முருகப்பெருமான் காலை கேடயச் சப்பரத்திலும், இரவு பூங்கோயில் சப்பரத்திலும் பவனி வரும் காட்சி. திரிலோசன ஜீரக கெளரி விரதம்.
ஐப்பசி 6, 23.10.2017, திங்கள்
சதுர்த்தி. கரிநாள். நாக சதுர்த்தி. குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுக சூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல். பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் குருபூஜை.
ஐப்பசி 7, 24.10.2017, செவ்வாய்
பஞ்சமி. குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுக சூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல். திருவட்டாறு சிவபெருமான் பவனி.
ஐப்பசி 8, 25.10.2017, புதன்
கந்த சஷ்டி. திருச்செந்தூர் முருகப்பெருமான் சூரஸம்ஹாரப் பெருவிழா. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூஜை.
ஐப்பசி 9, 26.10.2017, வியாழன்
சப்தமி. குமாரவயலூர் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம். சிக்கல் சிங்காரவேலவர் சூர்ணோற்ஸவம். சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றம் முருகர் திருக்கல்யாணம்.
ஐப்பசி 10, 27.10.2017, வெள்ளி
அஷ்டமி. சிக்கல் சிங்காரவேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமானத்தில் பவனி. ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை லோகாச்சாாியார் தேரோட்டம். வேளூர் திருக்கல்யாணம்.
ஐப்பசி 11, 28.10.2017, சனி
நவமி. கோஷ்டாஷ்டமி. திருவோண விரதம். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை. பர்வதமலை மல்லிகார்ஜுனர் பிரமராம்பிகை அன்னாபிஷேகம்.
ஐப்பசி 12, 29.10.2017, ஞாயிறு
அக்ஷய நவமி, திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
ஐப்பசி 13, 30.10.2017, திங்கள்
ஏகாதசி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
ஐப்பசி 14, 31.10.2017, செவ்வாய்
சர்வ ஏகாதசி. துவாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
ஐப்பசி 15, 01.11.2017, புதன்
துவாதசி. திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை. க்ஷீராப்திநாத பூஜை. பிரதோஷம். சொர்ணாவூர் யாக்ஞவல்ய ஜெயந்தி.
ஐப்பசி 16, 02.11.2017, வியாழன்
திரயோதசி. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உற்சவாரம்பம்.
ஐப்பசி 17, 03.11.2017, வெள்ளி
சதுர்த்தசி. லட்சுமி பூஜை. நெல்லை காந்திமதியம்மன், சங்கரன்கோவில் கோமதியம்மன் தலங்களில் உற்சவாரம்பம்.
ஐப்பசி 18, 04.11.2017, சனி
பெளர்ணமி. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் விருஷப சேவை. நெடுமாற நாயனார் குருபூஜை. குருநானக் ஜெயந்தி. திருவஹீந்திரபுரம் ஸ்ரீதேவநாத ஸ்வாமி டோல உற்சவம், சிதம்பரம் ஸ்ரீசிவகாமி அம்மன் கொடியேற்றம்.
ஐப்பசி 19, 05.11.2017, ஞாயிறு
பகுள பிரதாமை. கார்த்திகை விரதம். தூத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு கண்டருளல். இடங்கழி நாயனார் குருபூஜை.
ஐப்பசி 20, 06.11.2017, திங்கள்
துவிதியை. ஸ்ரீரங்கம் டோலோற்சவம் கரிநாள். கீழ்த்திருப்பதி பார்த்தசாரதிப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை.
ஐப்பசி 21, 07.11.2017, செவ்வாய்
சங்கடஹர சதுர்த்தி. நெல்லை காந்திமதியம்மன் காலை ரிஷப வாகனத்திலும், இரவு சந்திர விமானத்திலும் பவனி வரும் காட்சி. மாயவரம் மயூரநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம்.
ஐப்பசி 22, 08.11.2017, புதன்
பஞ்சமி. நெல்லை காந்திமதியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு. திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் உற்சவம் ஆரம்பம்.
ஐப்பசி 23, 09.11.2017, வியாழன்
சஷ்டி. நெல்லை காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரத்துடன் இரவு காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா. திருவாரூர் ஸ்ரீகமலை ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மஹா குருபூஜை ஆயில்ய விழா.
ஐப்பசி 24, 10.11.2017, வெள்ளி
சப்தமி. ஸாவித்திரி விரத கல்பாதி. நெல்லை காந்திமதியம்மன் கோலாட்ட அலங்காரம். சக்தி நாயனார் குருபூஜை.
ஐப்பசி 25, 11.11.2017, சனி
அஷ்டமி. காலவாஷ்டமி. மகாதேவாஷ்டமி. மாயவரம் கெளரிமாயூர நாதர் விருஷபாரூட தரிசனம். சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் ஆராதனை.
ஐப்பசி 26, 12.11.2017, ஞாயிறு
நவமி. திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் ஹனுமார் வாகனத்தில் புறப்பாடு. நெல்லை காந்திமதியம்மன் தங்கச் சப்பரத்தில் தபசுக்காட்சி. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் ஸ்ரீகாமாக்ஷி தபஸ் ஆரம்பம், திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி உற்சவர் அபிஷேகம்.
ஐப்பசி 27, 13.11.2017, திங்கள்
தசமி. தென்காசி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, வீரவநல்லூர் இத்தலங்களில் அம்பாள் திருக்கல்யாணம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் ஸ்ரீ காந்திமதியம்மன் திருக்கல்யாணம். ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் திருக்கல்யாணம்,
ஐப்பசி 28, 14.11.2017, செவ்வாய்
ஏகாதசி. திருஇந்தளூர் பரிமளரங்கராஜர் திருக்கல்யாணம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
ஐப்பசி 29, 15.11.2017, புதன்
துவாதசி. பிரதோஷம். தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல்.
ஐப்பசி 30, 16.11.2017, வியாழன்
திரயோதசி. திருநெல்வேலி காந்திமதியம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல். மயிலாடுதுறை, திருவையாறு, தலைக்காவிரி, கும்பகோணம் முதலிய தலங்களில் துலா உற்சவ பூர்த்தி, கடைமுக தீர்த்தம், கும்பகோணம் காவிரியில் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு தீர்த்தவாரி.
No comments:
Post a Comment