ராமர் வாலி மீது மறைந்திருந்து அம்பு விடுத்தார். குற்றுயிராகக் கிடந்த வாலி, மறைந்திருந்து அம்பு தொடுத்தது ராமர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டான். ""சக்கரவர்த்தி திருமகனான நீ, என் மீது என்ன குற்றம் கண்டு இவ்வாறு செய்தாய்! உன்னிடம் இரக்கம் இல்லாமல் போனது ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. தாய் போல இருக்கும் சீதையை நீ பிரிந்த காரணத்தால், இப்படி ஒரு துயரத்தைத் தந்து விட்டாயோ! ஏனெனில், அவள் உன்னுடன் இருந்தபோது, அவளுக்கு துன்பம் செய்த காகாசுரனுக்கு கூட வாழ்வு அளித்தாய். ஆனால், ஒரு தவறும் செய்யாத எனக்கு மரணம் கொடுத்தாய்!'' என்று சொல்லி உயிர் விட்டான். நமது கோரிக்கை சீதாபிராட்டியார் மூலம்தான் நிறைவேறும். எனவே, ராமனிடம் நம் கோரிக்கையை வைப்பதாய் இருந்தால், அதை சீதை மூலமாக வைப்பது உடனடி பலன் தரும்.
Wednesday, 25 October 2017
கோரிக்கை வைக்க சிறந்த இடம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment