தேவதத்தன் என்ற கந்தர்வன், காட்டில் தவத்தில் ஆழ்ந்திருந்த துர்வாசரின் தவத்தைக் கலைத்தான். கண் விழித்த துர்வாசர், அவனை நாரையாகும்படி சபித்தார். நாரையாக உருமாறிய அவன், தன் பாவம் தீர, சிவபெருமானைச் சரணடைந்தான்.
சிவன் அந்த நாரையிடம், ""தினமும் காசி சென்று கங்கையில் நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்ய சுயரூபம் கிடைக்கும்,'' என்று அருள்புரிந்தார். நாரையும் சிவனை பூஜித்து கந்தர்வனாக மாறியது. இந்த வரலாறு நடந்த சிவத்தலம் கடலூர் மாவட்டம் திருநாரையூர். இதே வரலாற்றின் அடிப்படையில் அமைந்த கோயில், சென்னை சைதாப்பேட்டை சவுந்தரேஸ்வரர் கோயில்.
இக்கோயில் 800 ஆண்டுகளுக்கு முந்தியது. "வடநாரையூர்' என்று பெயர் பெற்ற இங்கு, வில்வம், வன்னி, சரக்கொன்றை ஆகியவை தலவிருட்சங்களாக உள்ளன. ஒன்பது வாரம் நெய்தீபம் ஏற்றி சைதாப்பேட்டை சவுந்தரேஸ்வரரையும், அம்பாள் திரிபுரசுந்தரியையும் வழிபட்டவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்.
No comments:
Post a Comment