
வேலூர், சோளிங்கர் பாணாவரம் ரோடு லட்சுமிநரசிம்மர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தர்மசாஸ்தா கோயில். மூலவர் ஐயப்பன் குளத்தூர் சீனிவாச ஐயரால் பூஜிக்கப்பட்டவர். நடை அடைக்கும் போது பாடப்படும் ஹரிவராசனம் தாலாட்டுப் பாடலை இயற்றியவர் இவர். இவருடைய காலத்திற்குப் பிறகு இச்சிலை கேரளம், புனலூரில் நீண்டகாலமாக இருந்தது. பலரும் தங்கள் ஊருக்கு கொண்டு செல்ல முயற்சித்தும் பயனில்லை. ஐயப்ப பக்தரான சோளிங்கர் டாக்டர் தனசேகரன் முயற்சியால், சிலை சோளிங்கருக்கு கொண்டு வரப்பட்டு கோயில் கட்டப்பட்டது. தர்மசாஸ்தா, மகாகணபதி, பகவதி விக்ரஹங்களும் உள்ளன.
No comments:
Post a Comment