குந்தி, தன் மகன் கர்ணனை ஆற்றில் விட்டதால் ஏற்பட்ட பாவத்தை எண்ணி பயந்தாள். பாவம் தீர, தவ்டிய முனிவரிடம் பிராயச்சித்தம் கேட்டாள். மாசிமக நாளில் சிவனை வழிபட்டு, ஏழுகடலில் நீராடினால் பாவ நிவர்த்தியாகும் என்று அருள் செய்தார். தீர்த்தயாத்திரை புறப்பட்ட குந்தி, மாசிமகத்தன்று நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு அங்குள்ள குளத்தில் நீராடினாள். சிவனருளால் ஏழுகடல் தீர்த்தமும் குளத்தில் சங்கமித்தன. எனவே அந்த குளத்துக்கு "சப்தசாகரம்' என பெயர் உண்டானது. 12 படித்துறைகளுடன் இக்குளம் உள்ளது. ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற விரும்புவோர் இந்த குளத்தை 12முறை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது. கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலான இங்குள்ள சிவலிங்கம், ஆறு நாழிகைக்கு ஒருமுறை நிறம் மாறும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இருந்து 5கி.மீ., தொலைவில் உள்ளது.
Tuesday, 24 October 2017
சுற்றிவந்தால் சுகம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment