Tuesday 24 October 2017

வசதியிருந்தால் தங்கம் தானம் செய்யலாம்


கும்பகோணம் மகாமகக்குளத்தின் கிழக்கு, மேற்கு கரைகள் நீள்சதுரமாகவும், வடக்கு,தெற்கு கரைகள் சற்று உள் வளைந்தும் இருக்கும். உயரத்தில் இருந்து பார்த்தால் குடம் போல காட்சியளிக்கும். அமுதகுடத்தை நினைவூடடும் விதத்தில் இந்த அமைப்பு காணப்படுகிறது. மாசிமகத்தன்று, இங்கு புனித நீராடுவதுடன், தானமும் அளிக்க வேண்டும். அச்சுதப்ப நாயக்கரின் மந்திரியான கோவிந்த தீட்சிதர், தன் எடைக்கு எடை தங்கத்தை அந்தணர்களுக்கு வழங்கிய சரித்திரம் உண்டு. குளக்கரையில் உள்ள பிரம்ம தீர்த்தேஸ்வரர் துலாபார மண்டபத்தில் தீட்சிதர் தானம் அளித்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பொன்னிறமுடைய குரு, பொன்நிறக் கதிர்களை வீசும் சூரியன் ஆகிய இருகிரகங்களிடம் இருந்தும் காந்த ஆற்றலைப் பெற, பொன் தானம் செய்யும் வழக்கம் இருக்கிறது. வசதி இருப்பவர்கள் செய்யலாமே!

No comments:

Post a Comment