Thursday, 26 October 2017

வயது மூத்த பிரம்மனை சின்னமுருகன் தண்டித்தது ஏன்?

Related image

முருகன் பிரம்மனைக் குட்டிய வரலாறு கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ளது. சிவனை வணங்க கயிலாயம் வந்தார் பிரம்மா. படைப்புக்கடவுள் என்ற கர்வத்தோடு, முருகன் சிறுவன் தானே என்ற எண்ணத்தில் வணங்காமல் <உள்ளே நுழைந்தார். ஆனாலும், முருகன் பிரம்மனைத் தண்டிக்க விரும்பவில்லை. சிவதரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த போதும் பிரம்மாவுக்கு அகங்காரம் நீங்கவில்லை. "வழிபாடு' என்ற சொல்லுக்கு "அகங்கார நீக்கம்' என்று பொருள். இதைக்கூட உணராத பிரம்மனை தண்டிக்க முடிவெடுத்தார். அவரது தலையில் குட்டி சிறையிலிட்டார். தானே படைப்புக்கடவுளாகி சிருஷ்டித் தொழில் செய்தார். செல்வமும், திறமையும், புகழும் இருந்தாலும் இறைவனுக்கு அடங்கி நடப்பது கடமை என்பதை இதன் மூலம் உணர்த்தினார். இதையே வள்ளுவர், "எல்லாருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்கிறார். செல்வச்செழிப்புள்ளவர்க்கும் பணிவு தேவை என்பது இது உணர்த்தும் கருத்து.

No comments:

Post a Comment