ஆந்திரா கடப்பாவைச் சேர்ந்த நாராயணசூரி, லக்கம்மா தம்பதியின் மகன் அன்னமய்யா. ஏழ்மையான இவர், ஏழுமலை வெங்கடேசப்பெருமாளிடம், தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருநாள் அன்னமய்யாவின் தந்தை பக்கத்து கிராமத்தில் இருக்கும் வயலுக்குச் சென்றுவரும்படி கட்டளையிட்டார்.
இது தான் சந்தர்ப்பம் என்று, வயலுக்குச் செல்லாமல் திருப்பதி கிளம்பி விட்டார். கோவிந்த நாமத்தை ஜெபித்தபடி மலையடிவாரத்தை அடைந்தார். பசிமயக்கத்தில் கீழே விழுந்து விட்டார். அப்போது அவரின் தாயைப் போல பெண் ஒருத்தி அருகில் வந்து, ""பசிக்கிறதா? இதோ இதைச் சாப்பிடு,'' என்று உணவு கொடுத்தாள். சாப்பிட்டு முடித்தவர் நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பெண்ணைக் காணவில்லை.
அலமேலு மங்காபுரத்தில் இருக்கும் பத்மாவதி தாயாரே, தனக்கு உணவு தந்ததாக எண்ணி பரவசம் கொண்டார். தாயார் மீது "சதகம்' என்னும் 100 பாடல்களைப் பாடினார். "வெங்கடாசல மகாத்மியம்' என்னும் இசைக்காவியத்தையும் படைத்தார்.
No comments:
Post a Comment