வள்ளியை முருகப்பெருமான் காதலித்து மணம் செய்தார். அவள் முருகனை அடைவதற்கு அவளுடைய உறவினர்களே தடையாக இருந்தனர். இறுதியில் வள்ளியின் தோழியே அவளை முருகனோடு சேர்த்து வைத்ததாக கந்தபுராணம் கூறுகிறது. உயிரையும் இறைவனையும் சேர்ப்பதை உணர்த்தும் தத்துவமே வள்ளிதிருமணம். வள்ளி என்பது உயிராகிய ஜீவாத்மா.
வினைப்பயன்களே உறவினர்களைப் போல நம்முடன் இருந்து இறைவனுடன் சேர விடாமல் தடுக்கிறது. பக்தியே தோழியாக இருந்து அவனோடு நம்மைச் சேர்க்கிறது.
No comments:
Post a Comment