Monday 23 October 2017

ஆடுகிறான்... நடனமாடுகிறான்...


வலன் என்ற அசுரனிடம் இருந்து இந்திரனை, முசுகுந்த சக்கரவர்த்தி காப்பாற்றினார். அதற்குப் பரிசாக ஒரே வடிவுடைய ஏழு தியாகராஜர் சிலைகளைப் பெற்றார். அவற்றை அவர் ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோயில்களை, "சப்தவிடங்கத் தலங்கள்' என்பர். இத்தலங்களில், தியாகராஜப் பெருமான் நாட்டியக் கலைஞராக அம்பிகையை மகிழ்விக்கிறார். 

திருவாரூரில் மூச்சுக்காற்று உள்ளும் புறமும் சென்று வருவது போல ஆடும் அஜபாநடனம், நாகப்பட்டினத்தில் கடல் ஆர்ப்பரித்து எழுவது போல மேலும் கீழும் ஆடும் தரங்க நடனம், திருக்காராயிலில் கோழியைப் போல ஆடும் குக்குட நடனம், திருநள்ளாறில் பித்துப் பிடித்தவனைப் போல ஆடும் உன்மத்த நடனம், திருக்கோளிலியில் தேனை உண்ட வண்டு போல ஆடும் பிருங்க நடனம், திருவாய்மூரில் நீர்ப்பரப்பில் அசைந்தாடும் தாமரை மலர் போல ஆடும் கமல நடனம், வேதாரண்யத்தில் ஒயிலாக நடந்து வரும் அன்னப்பறவை போல ஆடும் ஹம்ஸ நடனம் ஆகியவை பக்தர்களைப் பரவசப்படுத்தும். இத்தலங்களைத் தரிசிப்பவர்கள் கலைத்துறையில் சிறந்து விளங்குவர் என்பர். 

No comments:

Post a Comment