Thursday 26 October 2017

பகீரதனுக்கு அருளிய முருகன்

Image result for murugan

கங்கையை பூமிக்கு வரவழைத்த பகீரதன் ராமாயண காலத்துக்கு முன்பே வாழ்ந்தவன். ஆனால், அவனுக்கு தமிழ்க்கடவுளான முருகனின் அருள் கிடைத்தது என்பது தேனூர் வரகவி சொக்கலிங்கனார் எழுதிய "சேய்த்தொண்டர் புராணம்' என்ற நூல் மூலம் தெரிய வருகிறது. "சேய்' என்றால் "குழந்தை முருகன்'. அவரது தொண்டர்கள் 78 பேர் வரலாறு இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பகீரத நாயனார். இவர் சென்னை தாம்பரம் அருகிலுள்ள வல்லக்கோட்டை பகுதியை ஆண்டார். திருப்புகழில் அருணகிரியார் இவ்வூரை "கோடைநகர்' என குறிப்பிட்டுள்ளார். பகீரதனுக்கு கோரன் என்ற எதிரி இருந்தான். இவன் பகீரதனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றினான். பகீரதன் சுக்ராச்சாரியாரை சரணடைந்து, இழந்த நாட்டை மீட்க வழி கேட்டான். வெள்ளிக்கிழமைகளில் பாலமுருகனை வழிபாடு செய்தால் குறை தீரும் என்றார் சுக்ரன். அதன்படி, அவனும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து கோரனை ஜெயித்து நாட்டை மீட்டான். முருகனுக்கு பிடித்தமான பங்குனி உத்திர விரதத்தையும் பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment