Monday 23 October 2017

பெரிய குடும்பஸ்தன்


பாவம் செய்யும் கொடியவர்களையும், தன்னை எதிர்த்து நாத்திகம் பேசுபவர்களையும் கூட, கடவுள் ஒருபோதும் வெறுப்பதில்லை. அவர்களும் திருந்த வேண்டும் என்றே அவர் எதிர்பார்க்கிறார். ""அப்பனே! தெரியாத்தனமாக இவ்வளவு காலம் பாவம் செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு!'' என்று உள்ளம் உருகினால் போதும். ஏற்று அருள்புரிய ஓடிவருவார். குணம் கெட்ட பிள்ளையை வெறுக்காமல் அன்பு காட்டி திருத்த முயற்சிக்கும் தாயாக அவர் இருக்கிறார். அந்த குணத்தை "வாத்சல்யம்' என்று குறிப்பிடுவர். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அதன் தலைவராக இருப்பவர் கடவுள். அதனால், அவரை "பஹு சம்சாரி' என்று சொல்வர். இதற்கு "பெரிய குடும்பஸ்தன்' என பொருள். 

No comments:

Post a Comment