மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள், வெற்றி மிதப்பில் களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, மகாபாரதப்போரினால் நிகழ்ந்த இறப்பினால் உண்டானதோஷம் கருதி துயரம் அடைந்தனர். தங்களின் ரட்சகனான கிருஷ்ணரிடம் பாவவிமோசனம் தீரவழி கேட்டனர். அவர் ஒரு கரியநிற தண்டமும், கருப்பு மாடு ஒன்றையும் வரவழைத்து, இக்கருப்பு தண்டத்தினை கையிலெடுத்துக் கொண்டு, இம்மாட்டினைப் பின் தொடருங்கள். இவ்விரண்டும், எங்கு வெள்ளை நிறமாக மாறுகின்றதோ, அங்கு, இறைவனை மனமுருகி வழிபடுங்கள். உங்களின் போரினால் உருவான பாவங்கள் விலக இறைவன் அருள்புரிவான் என்றார். அதன் படியே, அவர்கள் மாட்டினைப் பின்தொடர, கோலியாத்தில் தண்டமும், மாடும் வெள்ளை நிறம் அடைந்தது.
அவ்விடத்திலே ஒரு குளம் வெட்டி, நீராடி, ஐவரும் இறைவனைக் குறித்து தியானித்தனர். ஐவருக்கும் ஐந்து சிவலிங்கம் நந்தியுடன் சுயம்புவாக எழுந்தருளி, பாவ விமோசனம் அளித்தான் இறைவன். கோலியாக் நிஷ்கலங்க் மகாதேவ் கோயில். ஆர்ப்பரிக்கும் ஆக்ரோஷ அலைகள் காணப்படும். காலை 8:30 வரை ஆர்ப்பரிக்கும் அலைகள் சிறிதுசிறிதாக உள்வாங்க ஆரம்பிக்கின்றது. கோயிலை நோக்கி. அதுவரை பொறுமை காத்திருந்த மக்கள், கோயிலை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். கோலியாக் கடலின் நடுவே அமைந்துள்ள இறைவனை உற்சாகத்துடன் சரண கோஷமெழுப்பி, ஆர்வத்துடன் தரிசிக்கச் செல்கிறார்கள்.
பகல் பன்னிரண்டு முப்பது நெருங்கும் நேரத்தில் அமைதி காத்த கடல் மறுபடியும், ஆர்ப்பரிக்க சிறிது சிறிதாக கரையை நோக்கி முன்னேற ஆரம்பிக்க பக்தர்களும் கரையை நோக்கி விரைந்து வருகின்றனர். சிலநிமிடங்களில் , கோயிலின் பட்டொளிவீசும் கல்தூண், கொடிமரம் புள்ளியாகத் தெரிகின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற தலம் குஜராத் மாநிலம் பாவ் நகரம் கோலியாக்கில் உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத்தின் அஹமதாபாத்திற்கு, நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. அங்கிருந்து, பாவ்நகர். பாவ்நகரில் இருந்து கோலியாக்கிற்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. எத்தனை புயல் சீற்றம் கொண்ட போதிலும், பூகம்ப நிகழ்வு நடந்தபோதிலும், கொடி மரமோ, கல் தூணோ பாதிக்கப் படவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கும் செய்தி.
No comments:
Post a Comment