குழந்தை வரம் வேண்டுவோர், சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் விரதமிருக்க வேண்டும். இவர்கள் குழந்தை முருகனான பால தண்டாயுதபாணி அல்லது பால சுப்பிரமணியரை வழிபட வேண்டும். திருமண யோகத்துக்கு வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்திருக்கும் முத்துக்குமாரசுவாமியை வெள்ளிக்கிழமையில் வணங்க வேண்டும். பிரிந்த குடும்பம் இணைய தாய்,தந்தை, அண்ணன் விநாயகருடன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் படத்தை வைத்து வீட்டிலேயே வழிபடலாம். பயம், அலுவலகம், பணியிடத்தில் பிரச்னை நீங்க பன்னிருகரங்களில் ஆயுதம் தாங்கி, மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் முருகனை கந்தசஷ்டி கவசம் பாடி வழிபட வேண்டும் . ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாக சிவனுக்கு மந்திரம் உபதேசிக்கும் சுவாமிநாதனை வழிபட வேண்டும்.
Saturday, 2 December 2017
முருகன் எத்தனை முருகனடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment