Friday 1 December 2017

ஆடன்மா குதிரை


திருக்கார்த்திகையன்று அவதரித்தவர் திருமங்கையாழ்வார். இவருக்கு கலியன், பரகாலன், நாலுகவிப்பெருமாள், அருள்மாரி, நீல நிறத்தார் என்ற பெயர்கள் உண்டு. திருவாலி என்னும் தலத்தில், நீலன் என்னும் சேனாதிபதிக்கு பிறந்தார். குமுதவல்லி என்னும் திருமாலின் பக்தையை மணப்பதற்காக திருநறையூர் நம்பியிடம் திருவிலச்சினை (சங்குசக்கர முத்திரை) இட்டுக் கொண்டார். சோழமன்னனிடம் சிற்றரசனாக இருந்தார். மனைவியின் வேண்டுகோள்படி திருமாலின் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்தார். இதனால் செல்வத்தை இழந்தநிலையில், அன்னதானத்துக்காக வசதி மிக்கவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டார். 

இவரைத் திருத்த பெருமாள் முடிவெடுத்தார். மாப்பிள்ளை கோலத்தில் லட்சுமியுடன், ஆழ்வார் முன்னால் வந்தார். திருமங்கையாழ்வார் அவர்களிடம் கொள்ளையடிக்க முயற்சித்த போது, அவரது காதில் எட்டெழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாய' என உபதேசித்தார். இவருடைய குதிரைக்கு "ஆடன்மா' என்று பெயர். கையில் வேலுடன் காட்சி தரும் ஆழ்வார் இவர். சிறிய திருமடல், பெரியதிருமடல், திருவெழுகூற்றிருக்கை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்கு கோயில் எழுப்பி திருஅத்யயன உற்ஸவம் நடத்தினார். திருக்குறுங்குடியில் பரமபதம் எய்தினார்.

No comments:

Post a Comment