Friday 1 December 2017

எப்படி தெரிந்தது இவருக்கு ?


காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்திலுள்ள தெரு வழியாக நடந்து வந்தார். ஒரு வீட்டு வாசலில் பந்தல், தோரணம் என அமர்க்களப்பட்டது. அவ்வீட்டு சிறுவனுக்கு உபநபயனம் (பூணூல் சடங்கு). அந்த வீட்டின் முன் பெரியவர் நின்றார். வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து, பாதத்தில் விழுந்து ஆசி பெற்றனர்.
பெரியவர், உபநயனம் செய்த பையனையும், அவனது பெற்றோரையும் முன்னால் வரும்படி அழைத்தார். உபநயனம் நடப்பதற்கு முந்தியநாள் தான், அந்தப் பையன் தன் அப்பாவிடம், ""அப்பா! மகா பெரியவா நம்ம ஊருக்கு வந்திருக்கிறாரே! எனக்கு பூணூல் சடங்கு நடக்கிற விபரத்தை அவரிடம் சொன்னால், நம் வீட்டுக்கு வருவார் இல்லையா!'' என்று கேட்டான். அதற்கு அப்பா,""அந்த மகான்களெல்லாம் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள்,'' என்று சொல்லியிருந்தார்.

ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், பெரியவரே யாரும் அழைக்காமல் அங்கு வந்து நின்று, தங்களை முன்னால் வரச்சொல்கிறார் என்றால், அவர்களுக்கு எவ்வளவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்! பெரியவர் அந்த சிறுவனை ஆசிர்வதித்தார்.

பின், அடுத்த தெருவுக்கு சென்றார். அவ்வீட்டில், ஒரு சிறுவனும், அவனது பாட்டியும் இருந்தனர். பெரியவரைக் கண்டதும் நமஸ்கரித்தனர்.

பெரியவர் மூதாட்டியிடம், ""நேற்று இரவு உன் பேரன், நம் வீட்டுக்கு பெரியவரர் வருவாரா என்று கேட்டான் இல்லையா! நீ அதற்கு என்ன சொன்னாய்?'' என்றார்.

""பெரியவா! உங்களுக்கு பாதபூஜை செய்யவோ, பிøக்ஷ செய்யவோ (தானம் செய்தல்) எங்களிடம் வசதியில்லை, அதனால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமாட்டீர்கள் என்று சொன்னேன்,'' என்றார் மூதாட்டி.

பெரியவர் சிரித்தார்.

""பார்த்தாயா! இப்போது நான் வந்து விட்டேன், என்ன செய்யப் போறே!'' என்றவர், பையனை அருகில் அழைத்து, ""என்னைத் தரிசிக்க நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் வீட்டுக்கு வருவேனா என்று சந்தேகப்பட்டாய் அல்லவா! இப்போ, நான் உன் வீட்டுக்குள்ளேயே வரப்போறேன். நீ அனுமதிப்பாயா?'' என்றவர், வீட்டுக்குள் வந்து சிறுவனையும், மூதாட்டியையும் ஆசிர்வதித்தார்.
எங்கு என்ன நடந்தாலும் தெரிந்து கொள்ளும் மகிமை மிக்கவராக இருந்தார் பெரியவர்.

No comments:

Post a Comment