ராமனாக அவதரித்த விஷ்ணுவே முழுமுதற்கடவுள் என கம்பர் ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், சைவ வைணவத்தை இணைக்கும் விதத்தில் பல இடங்களில் சிவபெருமானையும் குறிப்பிட்டிருக்கிறார். ராமனின் திருமணத்திற்கு சிவன் வந்த காட்சியை "இளஞ் சந்திர மவுலியும் தையலாளொடும்' (பிறைநிலவைச் சூடிய சிவன் பார்வதியுடன்) வந்தார் என்கிறார். முக்கண் இறைவன், திரிபுரம் எரித்தோன், நாள் மதிச் சடைக்கடவுள், ஏறு அமர் கடவுள், முருகன் தாதை(முருகனின் தந்தை) என்ற சிவன் பெயர்களும் கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ளன. அயோத்தி நகர இளைஞர்களைச் சொல்லும்போது, ""கந்தனை அனையவர்''(முருகனைப் போன்றவர்கள்) என்று உவமை காட்டுவது இன்னும் சிறப்பு.
Friday, 1 December 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment