Tuesday, 9 January 2018

குரங்கு கையில் 'பொன்'


எதையாவது உடைத்தோ, சிதைத்தோ விட்டால் "குரங்கு கையில் பூமாலை" என்று சொல்வோம். குரங்கு கையில் பொன் என்றால் என்ன ?

புலவர் ஒருவர், சோழ மன்னனைப் புகழ்ந்து பாடி நகைகள் பரிசு பெற்றார். நகையே இல்லாத ஏழைக் குடும்பம் என்பதால் அவரது குடும்பத்தினருக்கு மிக்க மகிழ்ச்சி! என்ன செய்வதென்றே தெரியாமல், கையில் அணிவதைக் காலிலும், கழுத்தில் அணிவதைக் கையிலுமாக ஆளுக்கொரு விதமாக அணிந்து நின்றனர். இதை ராமாயணத்தோடு ஒப்பிட்டார் புலவர். 

ராவணன் தூக்கிச் சென்ற போது சீதை, தன் நகைகளைக் கழற்றி கிஷ்கிந்தை காட்டில் வீசிக் கொண்டே வந்தாள். அப்போது அதை குரங்குகள் கழுத்திலும், கையிலுமாக மாறி மாறி அணிந்து கொண்டன. அதைப் போல தன் குடும்பத்தினர் நிலையும் இருந்தது என்கிறார். புறநானூற்றுப் பாடலில் இந்தச் செய்தி இருக்கிறது.

No comments:

Post a Comment