சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பெருமாள் வராகமூர்த்தியாய் வீற்றிருக்கிறார். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளம் சென்று விட்டான். எனவே, பூமியைக் காக்கும்படி திருமாலிடம் அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர். பெருமாளும்வராக அவதாரம் எடுத்து, பாதாளஉலகம் சென்று இரண்யாட்சனைக் கொன்றார். வராக (பன்றி) முகமும், மனித வடிவும் கொண்டு காட்சியளித்தார். தன் அயர்ச்சியும், களைப்பும் தீர ஸ்ரீமுஷ்ணத்தில் எழுந்தருளினார்.
இப்பெருமானின் மேனிசுயம்வ்யக்தமாகும் (தானாகவே தோன்றியது). இவ்வூரில் "முட்டப்பதி வாழும் முருகா! வராகப்பெருமாளின் மகளாகிய வள்ளிநாயகியை விரும்பி ஆசை கொண்ட முருகா!' என்று அருணகிரி நாதரால் பாடல் பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த திருப்புகழ் பாடலில் வராகரின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment