Tuesday, 16 January 2018

கவர்ச்சி்க்கு மயங்காதே


முருகனின் வாகனம் மயில். அது கவர்ச்சியான தோற்றம் கொண்டது. இந்த மயிலை நாம் வாழும் உலகத்துக்கு ஒப்பிடலாம். இங்கே போதை, பெண், நடனம் ஆகிய கவர்ச்சிகள் மனிதனை ஈர்க்கின்றன. மனிதனும் இவை தனக்கு சொந்தமானவை என நம்பி அதற்கு அடிமைப்பட்டு விடுகிறான். இவற்றால் நோய்வாய்ப்பட்டாலும், மருந்துகள் தன்னைக் காப்பாற்றி விடுமென நம்புகிறான். உண்மையில் இது எதுவுமே நிரந்தரமல்ல என்பது மரணத்துக்குப் பிறகே தெரிகிறது. ஏனெனில், அவன் செல்லும் புதிய உலகில் இவை எதுவுமே இல்லை. அங்கே கவர்ச்சியான மயிலை அடக்கி முருகன், அதன் மீது அமர்ந்திருக்கிறார். "உலகக் கவர்ச்சிக்கு மயங்காதே, அது நிரந்தரமானதல்ல என்பதை மயில் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

No comments:

Post a Comment