Wednesday, 17 January 2018

உப்புமா சாப்பிட்டால் பாவமில்லை


மகாவிஷ்ணுவை வேண்டி ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அன்று சாப்பிடாமல் இருப்பது உத்தமம். முடியாதவர்கள் பழம், துளசி தண்ணீர் சாப்பிடலாம். உடலுக்கு முடியாதவர்கள் அரிசி உப்புமா சாப்பிடலாம். உப்புமாவுக்கு மட்டும் ஏன் அனுமதி என்பதற்கு காரணம் உண்டு.

ருக்மாங்கதன் என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில், நாட்டு மக்கள் அனைவரும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்பது சட்டமாகவே இருந்தது. மன்னனும் அதைக்கடைபிடித்தான். தொடர்ந்து ஏகாதசி விரதம் இருந்ததால், உலகத்தில் பாவம் என்பதே இல்லாமல் போயிற்று. பாவதேவதை தன் வேலை வாய்ப்பை இழந்து பிரம்மாவிடம் ஓடியது. "எனக்கு வேலையே இல்லையே! நான் எங்கே போய் தங்குவது' என்றது.

அவர் "முழு அரிசியில் போய் ஒட்டிக்கொள்' என்றார். இதனால்தான், ஏகாதசியன்று சாதம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். அரிசியை உடைத்து உப்புமா கிண்டி சாப்பிடுவார்கள். ஏகாதசியன்று பசி பொறுக்க முடியாதவர்கள் இனி அரிசி உப்புமா சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment