Tuesday, 16 January 2018

நிலா சூடிய பெருமாள்


சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடியிருப்பது தெரிந்த விஷயம். நாகப்பட்டினம் மாவட்டம் தலைச்சங்காடு நாண்மதியப் பெருமாள் தன் தலையில் சந்திரனை சூடியுள்ளார். 

இந்தக் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்று. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது சந்திரன் முதலிலும், மகாலட்சுமி அடுத்தும் வெளிப்பட்டாள். இவ்வகையில் சந்திரன் லட்சுமியின் அண்ணன் ஆகிறார். தேவகுருவின் மனைவி தாரையை சந்திரன் விரும்பியதால், அவரது சாபத்தால் குஷ்ட நோய் உண்டானது. சாப நிவர்த்திபெற ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் ஆகிய கோயில்களில் உள்ள பெருமாளை வழிபட்ட சந்திரன், இத்தலத்தில் வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றார். பெருமாள் அவருக்கு காட்சி தந்து தலையில் சூடிக் கொண்டார். இதனால் நாண்மதியப்பெருமாள் (சந்திரனைத் தலையில் சூடியவர்) என்றும், சந்திரசாபஹரர் (சந்திரனின் சாபத்தைப் போக்கியவர்) என்றும் பெயர் பெற்றார்.

No comments:

Post a Comment