12 வயதிலேயே, சிவனருள் பெற்ற சண்டிகேஸ்வரருக்கு "சிறிய பெருந்தகையார்' என செல்லப்பெயர் உண்டு. இந்தப் பெயரைச் சூட்டியவர் பெரியபுராணம் எழுதிய சேக்கிழார். "சிறியவர் ஆனாலும் செயலில் பெரியவர்' என்பது இதன் பொருள். நாயன்மார்களில் சிவனோடு இருக்கும் பேறு பெற்ற இவரது வரலாறு பக்திக்கு வயது தடையல்ல என்பதைக் காட்டுகிறது. சிவன் சந்நிதியின் அபிஷேக தீர்த்தம் விழ கோமுகி என்னும் வளைந்த பகுதி இருக்கும். இதன் அருகில் சண்டிகேஸ்வரர் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவரை வலம் வந்து வணங்கக் கூடாது. இவர் தான் கோயில் சொத்து, வரவு, செலவு கணக்குகளைக் கண்காணிப்பவர் என்பது ஐதீகம். தினமும் அர்த்த ஜாம பூஜை முடிந்ததும், சிவனுக்கு சாத்திய மாலை மற்றும் பரிவட்டத்தை(துண்டு) இவருக்கு அணிவிப்பர். இவரது மனைவி சண்டிகேஸ்வரியின் நிஜப்பெயர் தர்மநீதி. இவளுக்கு அம்மன் சந்நிதி கோமுகி அருகில் சந்நிதி இருக்கும்.
Thursday, 11 January 2018
பக்திக்கு வயது தடையல்ல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment