நமது வாழ்க்கைப் பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லவும் நவக்கிரக நாயகர்கள் உதவுகின்றனர். இருப்பினும் அவர்களால் நமக்குத் தோஷங்களும் ஏற்படுகின்றன. இந்தத் தோஷத்தை போக்க சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழிமுறைகள் எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடியதாகும். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
• நீலம் மற்றும் பச்சை ஆடைகளைத் தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.
• காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோயிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல், சுக்கிரனைப் பலப்படுத்தும்.
• கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்கினால் சனியின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
• தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.
• கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தைக் கூட்டும்.
• வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும், தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
• தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும், பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.
• வியாழக்கிழமைகளில் கோயில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும்.
• பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.
No comments:
Post a Comment