மன்னர் குலசேகரர், ராம பக்தர்களுடன் இணைந்து தினமும் பூஜை செய்து வந்தார். இதை விரும்பாத மந்திரி அரண்மனையில் இருந்த ரத்தின மாலையை யாருக்கும் தெரியாமல் மறைத்து பக்தர்கள் மீது பழி சுமத்தினார். திருடனைக் கண்டுபிடிக்க, எல்லா பக்தர்களும் பாம்பு அடைக்கப்பட்ட குடத்தில் கை விட்டு, "ரத்தின மாலையை எடுக்கவில்லை' என்று சத்தியம் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தார். நீதிதேவதையான மன்னரே, முதலில் கையை விட்டு, "ராமனின் அடியவர்களான இவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள். இது சத்தியம் என்றால் பாம்பு என்னைத் தீண்டாதிருக்கட்டும்,'' என்று சொல்லி கை விட்டார். பாம்பும் அவரைத் தீண்டவில்லை. மாட்டிக்கொண்ட அமைச்சர், மாலையை மன்னரிடம் ஒப்படைத்து மன்னிக்குமாறு வேண்டினார். இந்த மன்னரே குலசேகராழ்வார் என்று பெயர் பெற்றார்.
Monday, 15 January 2018
பாம்பு பரிட்டையில் பாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment