Tuesday 2 January 2018

அற்புதம் நிகழ்த்திய ஆறுமுகன்


திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், தனக்கு திருச்செந்தூரில் கோபுரம் எழுப்புமாறு கட்டளையிட்டார். கோபுரப்பணியை மேற்கொண்ட சுவாமிக்கு, ஒரு சமயத்தில் பணியாட்களுக்கு கூலி கொடுப்பதற்குப் பணம் இல்லாமல் போனது. வேறு வழியின்றி, முருகனின் திருநீற்றினையே பன்னீர் இலையில் வைத்து கூலியாக கொடுத்தனுப்பினார். அவர்கள் முருகன் கோயிலுக்கு சற்று தள்ளியுள்ள தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிய போது, திருநீறு பணமாக மாறி இருப்பதைக் கண்டனர். கோபுரத்தின் ஆறாம் நிலை அமைக்கும் வரை இந்த அற்புதம் நிகழ்ந்ததாகச் சொல்கின்றனர். அதன்பின் காயல்பட்டினத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் உதவியால் கோபுரத்திருப்பணி தொடர்ந்தது.

No comments:

Post a Comment