Thursday, 4 January 2018

நான்கு வகை கும்பாபிஷேகம்

நான்கு வகை கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் என்பது ஆவர்த்தம், அனுவர்த்தம், புனராவர்த்தம் மற்றும் அந்தரிதம் என்று நான்கு பொதுவான வகைகளாக உள்ளது.

* புதிதாக கோவிலை நிர்மாணம் செய்து, அங்கே புதிய கடவுள் சிலைகளை அமைத்து செய்யப்படுவது ‘ஆவர்த்தம்’ எனப்படும்.

* கோவில் அல்லது தெய்வ மூர்த்தங்கள் ஆகியவை வெள்ளம் அல்லது இதர இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, அவற்றை மீண்டும் சீரமைப்பது ‘அனுவர்த்தம்’ என்று சொல்லப்படும்.

* குறிப்பிட்ட காலம் கடந்த நிலையில் ஆலயத்தின் பழுதுகளை சரி செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிக்கும் முறை ‘புனராவர்த்தம்’ ஆகும்.

* கள்வர்களால் தெய்வ சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு, அவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்யும் முறைக்கு ‘அந்தரிதம்’ என்று பெயர்.

No comments:

Post a Comment