குரங்கு நம்மிடமுள்ளதை பிடுங்கிக் கொள்ளும் குணமுடையது. அதையே தெய்வமாகப் பார்த்தால் ஆஞ்சநேயனாய் மாறி அருளை வாரி இறைக்கிறது. யானை விரட்டினால் அலறியடித்து ஓடுகிறோம். ஆனால், ""கணேசா! என்னைக் காப்பாற்று,'' என வாய் நம்மையறியாமலே ஆனைமுகனை நினைக்கிறது. இதன் பொருள் என்ன ?
மிருகம் தன் இயற்கையான குணத்தை ஆண்டவனின் கட்டளைப்படி காட்டுகிறது. ஆனால், மனிதன் தனக்குரிய நிலையில் இருந்து மாறி மிருககுணத்துடன் அலைகிறான். அவன், தெய்வநிலைக்கு உயர வேண்டும். இதனால் தான், மனதில் எழும் எண்ணங்களை, மிருகங்களாக உருவகப்படுத்தி, அவற்றை அடக்க வேண்டும் என்ற அடிப்படையில், நமது தெய்வங்கள் அதன் மீது அமர்ந்துள்ளனர். வாகனங்கள் மீது அமர்ந்து வீதியுலா வருகின்றனர்.
No comments:
Post a Comment