Wednesday, 10 January 2018

உறுதியான பக்தி


குஜராத் மன்னரின் மகள் சினாபாய் குருகுலத்திற்கு கல்வி பயிலச் சென்றாள். விஷ்ணு பக்தரான குருநாதர், அவளுக்கு கல்வியோடு பக்தியையும் ஊட்டினார். தினமும் விஷ்ணுவை பூஜித்த பின்னரே, சாப்பிடும் வழக்கத்தை குருநாதர் கொண்டிருந்தார். சினாபாயும் அவரைப் போலவே செய்தாள். கல்வியை முடித்து, அரண்மனை திரும்பிய சினாபாயிடம், குருநாதர் ஒரு சாளக்கிராம கல்லை (பெருமாளின் வடிவம்) அளித்தார். 

"சினாபாய்! நீ தினமும் காலையில் இதற்கு பூஜை முடித்த பின்னரே சாப்பிட வேண்டும். இப்படி செய்தால், விஷ்ணுவின் அருள் உனக்கு எப்போதும் கிடைக்கும்,'' என வாழ்த்தி அனுப்பினார். 

பின் அவளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மறுநாள், கணவர் வீட்டிலும் பூஜை செய்ய ஆயத்தமானாள். பக்தி இல்லாத கணவனோ, சாளக்கிராமம் இருந்த பெட்டியை ஆற்றில் வீசி விட்டான். பூஜை செய்யாமல் உணவு உண்பதில்லை என்னும் விரதத்தால், சினாபாய் சாப்பிட மறுத்து விட்டாள். பல நாட்கள் உணவின்றி உடல் தளர்ந்தது. அவளின் மன உறுதியைக் கண்ட விஷ்ணு நேரில் காட்சியளித்து, சாளக்கிராமக் கல்லை வழங்கி அருள்புரிந்தார். சினாபாயும் பூஜித்த பிறகே சாப்பிட்டாள். கணவனும் திருந்தி பக்தனாக மாறினான்.

No comments:

Post a Comment