Thursday 19 October 2017

மலை தாங்கிய மாமணிகள்


கிருஷ்ணர், ஆஞ்சநேயர் இருவரும் பிறர் நலனுக்காக மலையைத் தாங்கியவர்கள். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தாங்கி வந்து பிரம்மாஸ்திரத்தால் மயக்கமடைந்த வானரங்களைக் காத்தார். கிருஷ்ணர் கோவர்த்தனகிரியைத் தன் விரலால் தாங்கி, பெரும் மழையில் இருந்து ஆயர்பாடி மக்களைக் காத்தார். இருவரும் தர்மத்தை நிலைநாட்ட தூது சென்றனர். ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றார் ஆஞ்சநேயர். கிருஷ்ணரோ பாண்டவர்களுக்காக திருதராஷ்டிரனிடம் தூது சென்றார். ஆஞ்சநேயருக்கு பிடித்தது ராமநாம சங்கீர்த்தனம். கிருஷ்ணருக்குப் பிடித்தது கோவிந்தநாம சங்கீர்த்தனம். 

No comments:

Post a Comment