நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள்.
* நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள்.
* சிருங்கேரியில் சரஸ்வதி கோவிலில் ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.
* வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியை கண்டு வழிபடலாம்.
* கர்நாடக மாநிலம் பேலூர் என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நடனமாடும் கோலத்தில் காட்சி தரும் சரஸ்வதியை கண்ணார கண்டு மகிழலாம்.
வெளிநாடுகளில் கலைவாணி
* ஜப்பானியர்கள் ‘பென்டென்’ என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார்.
* இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்துப் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர்.
* விஜயதசமி நாளில் பாலித்தீவில் ‘தம்பாத் ஸரிம்’ என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
No comments:
Post a Comment