குஜராத் மாநிலத்தில் துவாரகை கிருஷ்ணன் கோயில், கடலிலுள்ள ஒரு தீவில் இருக்கிறது. இவ்வூர் கடலுக்குள் அமைய காரணம் உண்டு. கம்சனுக்கு பெண் கொடுத்த மாமனார் ஜராசந்தன், கண்ணபிரான் தன் மருமகனைக் கொன்றுவிட்டான் என தெரிந்ததும், கண்ணன் மீது பகை கொண்டான். தன் படைகளை கிருஷ்ணர் தங்கியிருந்த மதுராபுரிக்கு அனுப்பினான். அவர்களால் கண்ணனைப் பிடிக்க முடியவில்லை. விடாக்கண்டனான ஜராசந்தன் ஒன்றிரண்டு முறை அல்ல... பதினெட்டு தடவை போர் தொடுத்தான். அவர்களது படையெடுப்பால் யாதவ மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்குக் கடலில் இருந்த ஒரு தீவுக்கு கண்ணன் அவர்களுடன் சென்றான். அந்த தீவில் அழகிய நகரத்தை உருவாக்கினான். அதுவே துவாரகை என பெயர் பெற்றது.
Sunday, 1 October 2017
துவாரகை தோன்றிய கதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment