Thursday, 5 October 2017

குழந்தைகளுக்கே சொந்தம்


விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. இப்படி சிதறிப்போகும் காயை பெரியவர்கள் எடுக்கலாமா என்றால் கூடாது. இது குழந்தைகளுக்கே சொந்தம்.

1941ல், நாகப்பட்டினத்திற்கு காஞ்சிப் பெரியவர் வந்திருந்தார். அங்கேயிருந்த கோயிலில் பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைக்க பெரியவருடன் வந்திருந்தவர்கள் முன்வந்தனர். இதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கவனித்து ஓடிவந்தார்கள். அவர்கள் சுவாமிகள் மீது விழுந்து விடக்கூடாதே என்ற பயத்தில் அங்கிருந்தவர்கள் அவர்களை விரட்டினர். உடனே ஒரு சிறுவன் மிகவும் ஆணித்தரமாக, ""பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு விட்டு எங்களை வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதை தான். அதை எடுத்துக்கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்,'' என்றான்.

உண்மை தான்! யானை முகத்துடன் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டும் விநாயகருக்குரிய எல்லா நைவேத்யங்களுமே, குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை என்பதில் சந்தேகமே இல்லை.

No comments:

Post a Comment