சக்திவழிபாடு மிகவும் பழமையானது. சங்க காலத்தில் "கொற்றவை' என்று அம்பிகையை அழைத்தனர். "வெற்றிச் செல்வி' என்பது இதன் பொருள். சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு பற்றி இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். இவளது ஜடை தங்கக்கயிறால் கட்டப்பட்டுள்ளது. தலையில் பன்றியின் தந்தம் வைத்திருக்கிறாள். நெற்றிக்கண்ணுள்ள இவளது வாய் பவளம் போல் சிவந்துள்ளது. விஷம் குடித்ததால் கழுத்து நீலநிறமாக உள்ளது. புலிப்பல் டாலர், புலித்தோல் ஆடை, வளையல் அணிந்துள்ள இவள் திரிசூலம், வில், வாள், சங்கு, சக்கரம், தாமரை ஏந்தியிருக்கிறாள். மகிஷன் காலடியில் கிடக்கிறான். சிங்கமும், கலைமானும் இவளது வாகனங்கள். சிங்கக்கொடி வைத்திருக்கிறாள். சிவ, விஷ்ணு அம்சம் இணைந்து இவள் வடிவமைக்கப்பட்டிருக்கிறாள்.
Thursday, 5 October 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment