Saturday 14 October 2017

ஆன்மிக உலகத்தின் வீரர்கள்


மகாவீரர் என்றால், ஜைனமத ஸ்தாபகர் தான் நினைவுக்கு வருவார். ஆனால், வடக்கே ராமபிரானையும், அனுமானையும் மகாவீரர் என்கின்றனர். பவபூதி என்பவர் வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட ராமகதை ஒன்றை எழுதினார். இதற்கு "மகாவீர சரிதம்' என்று பெயரிட்டார். ராமனையே "மகாவீரர்' என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நூல் என்ன காரணத்தாலோ பாதியில் நின்று விட்டது. ராமபிரான் சுக்ரீவனைச் சந்திக்கும் கட்டம் அது. இந்த புத்தகத்தை தென்மாநிலத்தில் ஒருவரும், வடமாநிலத்தில் ஒருவருமாக எழுதி முடித்தனர். எனவே, கதையின் போக்கும் மாறுபட்டது. அனுமானை தெலுங்கில் ஆஞ்சநேயலு, கர்நாடகத்தில் ஹனுமந்தையா, மகாராஷ்டிராவில் மராத்தி பேசும் ஊர்களில் "மாருதி' என்றும் அழைப்பர். இந்தி பேசும் சில மாநிலங்களில் அவரை "மகாவீரர்' என்கின்றனர். ஆக, மூன்று மகாவீரர்களை ஆன்மிக உலகம் கண்டிருக்கிறது. 

No comments:

Post a Comment