Friday 19 January 2018

எளிமையாக எழுதுபவர்


அயோத்தியில் நடந்த திருவிழா காண துளசிதாசர் சென்றார். வெயில் அதிகமாக இருந்ததால், ஆலமர நிழலில் ஒதுங்கினார். அங்கே இரண்டு துறவியர் ராமாயணம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். துளசிதாசர் அதை ஆர்வமாக கேட்டார். ஒரு துறவி, "வால்மீகி ராமாயணத்திற்கு இணை ஏதுமில்லை'' என்று சொல்ல, மற்றொருவர், "உண்மை தான்! ஆனால், பண்டிதர்கள் மட்டுமே அதைப் படித்து மகிழ்கின்றனர். சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லையே! எனவே ராமகாவியத்தை யாராவது எளிய நடையில் இயற்றினால் உலகிற்கே நல்லது,'' என்றனர். துளசிதாசரின் உள்ளத்தில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. "நானே அந்தப்பணியைச் செய்தால் என்ன!'... உடனடியாக ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். "ராமசரித மானஸ்' என்று பெயரிட்டார். வால்மீகி ராமாயணத்திற்கு இணையாக இந்தக் காவியம் போற்றப்படுகிறது.

தமிழக கோவில்களின் வரலாறுகளை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள்...

No comments:

Post a Comment