
ஆதிசங்கரர் கங்கைக்கரைக்கு வந்த போது, ஒரு புலையனும்(சுடுகாட்டில் பணிபுரிபவர்), அவரது மனைவியும் குறுக்கிட்டனர். ஒரு சீடன் அவர்களிடம், "தாழ்ந்த ஜாதியில் பிறந்த நீங்கள், குருநாதர் வரும் போது இப்படி குறுக்கே போகிறீர்களே?'' என்றார். அதற்கு அவன், "எல்லா உயிர்களிலும் கடவுளே குடியிருக்கிறார் என்பது தெரியாதா?'' என கோபித்தான். உடனே சங்கரர், "நீ சொல்வது சரியே! அறியாமல் சொன்ன சீடனை மன்னித்து விடு'' என்றார். அப்போது புலையனும், அவன் மனைவியும் சிவபார்வதியாக காட்சி தந்தனர். அங்கு தான் சங்கரர், மனித தர்மம் பற்றிய "மானிஷா பஞ்சகம்' என்னும் நூலை இயற்றினார்.
No comments:
Post a Comment