Monday 8 January 2018

ருத்ராட்சம் அணிந்தால் 'இப்படி' ஒரு நன்மை


கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் ""சுவாமி! தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால், என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்'' எனக் கேட்டார். "என்ன விளையாடுகிறாயா? ஏழரை ஆண்டு அல்ல! ஏழரை நாழிகை கூட உன்னால் என்னை நெருங்க முடியாது,'' என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுயரூபம் காட்டிய சிவன், "சனீஸ்வரா! தோற்றுப் போனாயா?'' என்றார். 

"ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே'' என சிரித்தார் சனீஸ்வரர்.

யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலைநாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத்ராட்சம் அணிந்து சிவநாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப்பட்டார். 

No comments:

Post a Comment