தெப்பக்குளங்கள் இருக்கக் கூடிய கோவில்களைத் தரிசிப்பது மிக விசேஷம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தங்கத்தாலான தாமரையே இருக்கிறது. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வருவதற்காக கி.பி.1635ல் வெட்டப்பட்டது. ஆயிரம் அடி நீளமும், 950 அடி அகலமும் கொண்டது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பக்குளம் 1158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டது. இதை நதியாக கருதுவதால், "ஹரித்ரா நதி' என்று பெயரிட்டுள்ளனர். கும்பகோணம் மகாமகக் குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. திரிவேணி சங்கமத்தையும் விட இத்தீர்த்தம் புனிதம் மிக்கது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள், சிதம்பரம் நடராஜர், சீர்காழி தோணியப்பர், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவெண்காடு, திருவண்ணாமலைக் கோவில்களின் தெப்பக்குளங்களும் அளவில் பெரியவை. திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பக்குளமான கமலாலயம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
Wednesday, 17 January 2018
பெரிய பெரிய குளங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment